districts

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

சேலம், ஏப்.17- இந்தியா கூட்டணி சார்பில் சேலம், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் புதனன்று மாலையுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. முன்னதாக, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக் குறிச்சி) வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வடக்கு மாநகரச் செயலாளர் எம்.பிரவீன் குமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்காடு தாலுகாக்குழு சார்பில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பு பணி கட்சியின் தாலு காச் செயலாளர் நேரு தலைமையில் நடைபெற்றது. கன்னங் குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சிபிஎம் கவுன்சிலர்  தேவி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், கட்சியின் தாலுகாச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேலு, இந்தியன்  வங்கி ஊழியர் ரகுபதி உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். சிவதாபுரம் பகுதியில் லெனின் தலைமையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வக ணபதி எடப்பாடி பகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு  செய்தார்.