districts

img

நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 24- மோசமான சாலைகளால் விபத் துகள் நடைபெற்று உயிரிழப்பு அதி கரித்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பவானி - அத்தாணி செல்லும் நெடுஞ்சாலையில் பெரிய மோள பாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் இருந்த இரண்டு வேகத்தடை கள் முதல்வர் வருகையை அடுத்து அகற்றப்பட்டது. அதற்குப் பின் இது வரை 12 விபத்துக்கள் நடைபெற் றுள்ளது. ஒருவர் உயிரிழந்தார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். எனவே, விபத்தை தடுக்கும் விதமாக மீண் டும் அதே இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். பெரிய மோளபாளையம் பேருந்து நிறுத்தம் முதல் கழுகு  பாலம் வரை கட்டப்பட்டு கொண்டி ருக்கிற கழிவுநீர் கால்வாயை கட் டும் பணியை விரைவாக கட்டி  முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை யின் குறுக்கே சிறு பாலம் கட்டும்  பணி நடைபெறுகிறது. முறையான எச்சரிக்கை பலகை வைக்கப்படா ததால், பள்ளத்தில் விழுந்து ஒரு வர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். எனவே, உட னடியாக அந்த இடத்தில் சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும். தளவாய் பேட்டை, வைரமங்கலம் பகுதியில் சாலையை செப்பனிட வேண்டும். ஜம்பை சின்னியம் பாளையம் சாலையில்  தனியார் நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல குழி தோண்டி போக்குவ ரத்து இடையூறு ஏற்படுத்தி உள்ள னர். இதனை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரிய மோளபாளையம் கிளை செயலா ளர் வி.தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.பி.பழனிச்சாமி, பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக் கம், பி.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பவானி தொகுதி செயலாளர் இலா.ஆற்ற லரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செய லாளர் ந.வேணுகோபால் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட் டத்தில், பொதுமக்கள் திரளாக பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.