districts

img

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

அன்னூர்,ஜன.22- அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று நோய் தொற்று விழிப்புணர்வு பிரச்சார துண்ட றிக்கையை விநியோகம் செய்தனர்.  நாடு முழுவதும் கொரோனா பெரும் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங் கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அன் னூரில் உள்ள வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகள்,  பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்கும் வாசகங் கள் அடங்கிய துண்டு அறிக்கை விநியோகத்தில் ஈடுபட்ட டனர். இதில் ஒன்றிய நிர்வாகிகள், சரவணன், அர்ஜுன், மாணவர் சங்க நிர்வாகிகள் அரவிந்த், நவீன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.