districts

img

புறவாசல் வழியாக வேளாண் விரோத சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி

சேலம், டிச.23- புறவாசல் வழியாக வேளாண் விரோத சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசு, வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட் டத்தை அறிவித்துள்ளது. இது ஓராண்டுக்கும் மேலாக தில்லி எல்லைகளில் நடைபெற்ற விவசா யிகளின் போராட்டத்தின் விளை வாக, மோடி அரசால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட் டங்களை மீண்டும் பின்வாசல் வழி யாகக் கொண்டு வரும் கொள்கை திட்டமாகும். இத்திட்டத்தை உட னடியாக கைவிட வேண்டும். மேலும், கிரேட்டர் நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவசாயி களை விடுதலை செய்ய வேண்டும். பஞ்சாப் எல்லையில் உண்ணாவிர தம் மேற்கொண்டிருக்கும் விவ சாயத் தலைவர் ஜகஜித் சிங் தலே வாலின் உடல்நிலை மோசமடை வதால், நிலுவையிலுள்ள முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி ஐக் கிய விவசாயிகள் முன்னணி சார் பில் திங்களன்று வேளாண் விரோத சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. சேலம் கோட்டை மைதானத்தி லுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் எ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் ஒருங் கிணைப்புக்குழு உறுப்பினர்கள் என்.கே.செல்வராஜ், அய்யந் துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அரங்க.சங்கரய்யா, ஆர்.நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.