districts

img

மாணவர் சங்கத்தின் தொடர் தலையீடு மாணவர்களின் சான்றிதழ்கள் மீட்பு

கோவை, நவ.28 – கோவையில் தனியார்  கல்வி அறக்கட்டளை நிர்வா கத்தால் பாதிக்கப்பட்ட மாண வர்களின் கல்வி சான்றிதழ் கள் மாணவர் சங்கத்தின் தலையிட்டால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. கோவை எஸ்எஸ்எம் கல்வி  அறக்கட்டளையின் நிர்வா கியான பிரபு என்பவர் நடப் பாண்டில் 12 ஆம் வகுப்பு  முடித்த சில மாணவர் களை அணுகி, இலவசமாக மேற்படி  படிக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர்க ளது அசல் கல்வி சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

இதன்பின் ஏதேதோ கார ணங்கள் கூறி அவர்களிடமிருந்து ரூ.5  ஆயிரத்தையும் பெற்றுள்ளார். ஆனால்,  இதன்பின் அவர் கூறியபடி கல்லூரி யில் சேர்த்துவிடாத நிலையில், சந்தே கமடைந்த மாணவர்கள் தங்களது அசல்  சான்றிதழ்களை திரும்ப கேட்டுள் ளனர். இதற்கு உரிய பதிலளிக்காத பிரபு, சான்றிதழ்களையும் வழங்கா மல் காலம் தாழ்த்தியுள்ளார். இதைய டுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெள்ளியன்று இந்திய மாணவர்  சங்கம் மற்றும் அனைத்திந்திய மாணவர்  பெருமன்றத்தின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவினை அளித்தனர்.  

இதனைத்தொடர்ந்து, எஸ்எஸ்எம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள்,  இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் அசாருதீன், செயலாளர் தினேஷ் ராஜா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் தலை வர் குணசேகரன் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் அழைத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதன்பின், மாணவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அறக்கட்டளை நிர்வாகிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

;