நாமக்கல், ஜூலை 15- 75 ஆவது சுதந்திர தினவிழா மற் றும் புத்தக திருவிழாவை நடத்துவது குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், 75 ஆவது சுதந்திர தின விழாவினையொட்டி, மாவட் டத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் புத்தக திரு விழாவை மிகச்சிறப்பாக கொண்டா டுவது குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆட்சியர் பேசுகையில், இந்திய விடு தலைக்காக பாடுப்பட்ட தேசத் தலை வர்களைப் போற்றும் வகையில் ‘விடு தலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் களின் புகைப்படங்கள் காட்சிப்படுத் துவது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும், என் றார். மேலும், கல்வி வளர்ச்சியில் புத்த கங்களின் பங்கு மிக முக்கியமானதா கும். பல்வேறு புத்தகங்கள் தான் சாதாரண குடிசை வீட்டில் பிறந்த வர்களை கூட உலகறிந்த அறிஞர்க ளாகவும், தலைவர்களாகவும், சிந்த னையாளர்களாகவும், மிகப்பெரிய நிர்வாக திறன்பெற்ற அலுவலர்க ளாக உருவாக்கி உள்ளன. தினந் தோறும் புத்தகங்களை வாசிப்பது வாழ்வின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. புத்தக வாசிப்பை மக்களிடையே கொண்டு செல்ல மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தபட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாமக்கல் மாவட் டத்தில் அமுத பெருவிழாவுடன் சேர்ந்து புத்தக திருவிழா நடத்தப் படவுள்ளது. இந்த புத்தக திருவிழா வில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தா ரின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எழு திய நூல்கள் இடம்பெறவுள்ளன, என்றார். முன்னதாக இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் க.ராஜாங் கம், வருவாய் அலுவலர் ந.கதிரே சன், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் உட்பட அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.