districts

img

வருமானவரித் துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

கோவை, மார்ச் 31- காங்கிரஸ் கட்சி மீதான,  வருமான வரித்துறை அப ராதம் விதிப்பு நடவடிக் கையை கண்டித்து கோவை கருமத்தம்பட்டியில் அக்கட் சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி ரூ.1,823 .08 கோடியைச் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதைக்  கண்டித்து நாடு  முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை கருமத் தம்பட்டி நால்ரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக் கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.