மேட்டுப்பாளையம், அக்.31- மேட்டுப்பாளையம் நகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன் சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலை மையில் நடைபெற்றது. இதில், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தேங்கி யுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைத்து அதிமுக கவுன்சிலர்கள் பேசினர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் கூட்டத்தில் கலந்து கொள்வில்லை. ஆகவே, கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டி உள்ளதால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என திமுக கவுன் சிலர்கள் வலியுறுத்தினர். இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் என இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அது தள்ளு முள்ளாக முற்றிய நிலையில், திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் திடீரென கூட்ட அரங்கில் இருந்த மர நாற்காலியை எடுத்து தூக்கி எறிந்தார். மேலும், மைக்குகளும் வீசப்பட் டன. இதனால் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், பிரச்சனை முடிவுக்கு வராததால் மன்ற கூட் டத்தில் வைக்க பட வேண்டிய 11 தீர்மானங்களும் ஆல் பாஸ் முறையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து விட்டு நகர் மன்ற கூட்டம் முடிவு பெற்றதாக கூறி அரங்கை விட்டு வெளியேறினார். மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.