districts

img

விக்னேஸ்வரா மழலையர் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கி பயிலரங்கம்

திருப்பூர், மே 25 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு கிளை  சார்பாக மடிப்பு நுண்ணோக்கி உருவாக்குதல் மற்றும் செய் முறை பயிற்சி முகாம் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள விக்னேஸ்வரா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் வியாழனன்று நடைபெற்றது.          மடிப்பு நுண்ணோக்கி உருவாக்கும் பயிலரங்கில் அறிவி யல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் வரவேற் றார். திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீராம்கு மார் பயிற்சி குறித்த அறிமுகத்தை கூறினார். மாநில செயற் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பயிற்சியின் நோக்கம் குறித்து  எடுத்துரைத்தார்.      மடிப்பு நுண்ணோக்கி செய்முறை பயிற்சி தருவதற்காக  மதுரையில் இருந்து வருகை புரிந்த கருத்தாளர் பாண்டிய ராஜன் பயிற்சிக்கான பெட்டகத்தை வழங்கியதோடு மடிப்பு  நுண்ணோக்கியை உருவாக்கி அவற்றை பயன்படுத்தும் முறை பற்றி சோதனை முறையில் எடுத்துரைத்தார்.  இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்கத் தன் னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மிகக் குறைந்த விலையில், அனைத்து மாணவரும் பயன்படுத் தக்கூடிய நுண்ணோக்கியை உருவாக்கினர். இதன் மூலமாக  மாணவர்களிடையே நுண்ணோக்கியின் பயன்களும், உயிரி யல் ஆய்வுகள் பற்றிய கருத்துகளும் விவாதிக்கப்பட்டது. இந் நிகழ்வை கிளை பொருளாளர் அஜித் குமார் மற்றும் ஷாருக் கான் ஒருங்கிணைத்தனர்.