districts

திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலை இலக்கிய திறனாய்வுக்கு போட்டிகள்

திருப்பூர், மார்ச் 30- திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலை இலக்கிய திற னாய்வு போட்டிக்கு மாணவ, மாண விகளுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கான கலை இலக் கிய திறனாய்வு போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இதன்படி இவ் வாண்டுக்கான கலை இலக்கிய திற னாய்வு போட்டிகள் அறிவிக்கப்பட் டுள்ளன. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நம் பள்ளி, எனக்கு பிடித்த விளையாட்டு, செவ்வானம், கொரோனாவை ஒழிப்போம்  உள் ளிட்ட தலைப்பில் ஓவியப் போட்டி கள் நடைபெற இருக்கின்றன. இதே போல் , ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான்  விரும்பும் தலைவர், வயலும் வாழ் வும், நில் கவனி செல், சரணா லயம் உள்ளிட்ட தலைப்புகளில் ஓவி யம், நான் மேயரானால், மாதிரிப் பள்ளி, காய்ந்த வயிறு, நாடோடி கள் உள்ளிட்ட தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது.  

ஒன்பதாம் வகுப்பு முதல் பண்ணி ரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கணினி உலகம், நவீன ஓவியம், நீண்ட நாள் பயணம், உலகை மாற்றிய புகைப் படம் உள்ளிட்ட தலைப்புகளில் ஓவி யம், சீர்மிகு நகரம், துரித உணவு, நீரின்றி அமையாது உலகு, என்றும் காந்தி என்ற தலைப்புகளில் கட் டுரை, நூறு பூக்கள் மலரும், சிறகை விரிப்போம், சிகரம் தொடலாம் என்ற தலைப்புகளில் கவிதைப் போட்டிகளும் நடைபெறுகிறது. இப்போட்டிகள் ஏப்ரல் மாதம் 3  ஆம் தேதி (ஞாயிறன்று) நடைபெற உள்ளது. ஓவியப் போட்டிகள் காலை 10 மணி முதல்  11 மணி வரை யிலும், கட்டுரைப் போட்டி காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை யிலும், கவிதைப் போட்டி 12 மணி யிலிருந்து ஒரு மணி வரையிலும் நடைபெற உள்ளது. இப்போட்டி கள் திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரில், இடுவாய் சின்னம்மன் திருமண மண்டபத்தி லும், திருப்பூர் தீயணைப்பு நிலை யம் அருகில் கருப்பராயன் சுவாமி கல்யாண மண்டபத்திலும், பெருமா நல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஸ்ரீ செல்வம் மஹால், நல்லூர் பழைய பத்திர அலுவலகம் எதிரில் சோளியம்மன் திருமண மண்டபத்தி லும் நடைபெறுகிறது. எழுதத் தேவை யான தாள்கள் மற்றும் படம் வரை வதற்கான ட்ராயிங் சார்ட் ஆகி யவை போட்டிகள் நடைபெறும் இடங்களில் கொடுக்கப்படும். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு ரொக்க பரிசும், நினைவுப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் ஏப்ரல் 19  ஆம் தேதியன்று, புத்தகத் திருவிழா வளாகமான கேஆர்சி சிட்டி சென் டரில் வழங்கப்பட உள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளுக்கு தின சரி குலுக்கல் முறையில் 10 நபர் களுக்கு தலா 500 ரூபாய் மதிப்பி லான புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.