நாமக்கல், செப்.4- தமிழ்நாட்டில், பொதுமக்களின் குடிநீர் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள் ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் விரை வாக செயல்படுத்தப்பட்டு வருவதாக நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில், கூட்டுக் குடிநீர் திட்டதிற்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன் ஆகியோர் கூட்டுக்குடிநீர்த் திட்டத் திற்கு அடிக்கல் நாட்டினர். இதையடுத்து 544 பயனாளிகளுக்கு, கடன் உதவி, பட்டு வளர்ச் சியின் சில்க் சமக்ரா திட்டத்தில் மல்பரி நடவு மானியம், காப்பீட்டு திட்ட அட்டை உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு திட்டங்களின் சார்பில், ரூ.8.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். இதன்பின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ராசி புரம் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் ஒரு வரு டத்தில் பயன்பாட்டிற்கு வந்து விடும். ராசி புரம், நாமக்கல் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த வீரபாண்டி ஏரியை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க தமிழக முதல்வர் அனு மதி அளித்துள்ளார். ராசிபுரம் பகுதிக்கு அந்த ஏரியிலிருந்து குடிநீர் வந்தது. எனவே வீர பாண்டி ஏரி சீரமைக்கப்பட்டால், ராசிபுரம், நாமக்கல் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை என்றைக்குமே வராத நிலை ஏற்படும். கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 10,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிநீர் வடிகால் வாரி யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 25 ஆயி ரம் கோடியை வழங்கி உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் குறைந்த காரணத்தால் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஏற் படுத்தினார். இதன் பயனாக 544 இடங்களில் கிணறுகள் அமைத்து 4.50 கோடி பொதுமக்க ளுக்கு, கிராமங்களில் 55 லட்சம் லிட்டர் வீத மும் நகர பகுதிகளில் 130 லிட்டர் வீதமும், நாள் தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. இன் றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீண்ட காலம் பயன் படும் குழாய்கள் அமைக் கப்படுகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் பகுதி 2 மூலம் பத்தாயிரம் கோடி மதிப் பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வரை திட் டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் திட்டங்களை சிறப்பாக செயல் படுத்த அதிக அளவிலான நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது. 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 21 மாநகராட்சிக்கும் தேவை யான அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அனைத்திற்கும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் கே.செல்லமுத்து. நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசுத்துறை அதிகாரிகள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.