districts

கொள்ளிடம் பகுதி கடலோர கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

சீர்காழி, ஏப்.28-. நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாலும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதாலும், நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் குறைந்து விட்டதால் சராசரியாக கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற் பட்டுள்ளாதால் கடலோர கிராம மக்கள் போதிய குடிநீரின்றி தவித்து வருகின்றனர். பழையாறு, புதுப்பட்டினம், தற்காஸ், கூழையாறு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தனியார்டேங்கர் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர்ப் பற்றாக் குறையை போக்கும் வகையில் நிலத்தடி நீரைச் சுத்திகரிப்பு செய்துதொட்டியில் தேக்கி பொதுமக்களுக்கு அரசு குடிநீர் வழங்கித் கொண்டிருந்த முறை அனைத்து கிராமங்களிலும் ரத்து செய்யப் பட்டு விட்டதால் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.அரசு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த தேக்கத் தொட்டி மற்றும் மின்மோட்டார்கள் முற்றிலும் மாயமாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் நிலத்தடி நீரைச் சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்கும் முறையைமீண்டும் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தவும் நிலத்தடி உவர்நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை அனைத்து ஊராட்சிகளிலும் பொறுத்தி போதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;