கோவை, பிப்.24- ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதி போதுமானதல்ல என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கூடுதல் நிதி கேட்பது என கோவை மாநகராட்சி அலுவல கத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆய்வுக்கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி யில் செயல்படுத்தப்பட்டு வரும்’ ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளியன்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை யில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை மாநக ராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்க அதிகாரிகள், மாநகராட்சி அதி காரிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் செயல் படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடைபெற்றது. இதுவரை 53 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 15 பணி கள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகை யில், முடிவுற்ற பணிகள் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணி களை மார்ச் 31க்குள் நிறைவு செய்து, தமிழ்நாடு முதல்வரின் தேதியை பெற்று இதற்கான திறப்பு விழாவை செய்திட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில், பணி கள், தரமான முறையில் நடை பெற அதிகாரிகள் உரிய கண் காணிப்பு செய்ய வேண்டும். வரும் நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் சத்தி சாலை, மேட்டுப் பாளையம் சாலை, திருச்சி சாலை ஆகியவற்றில் மழைநீர் வடிகால் அமைத்திட முன்னுரிமை அளித் திட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண் டார். முன்னதாக, கோவை மாநக ராட்சியில் ஏற்கனவே உள்ள வார்டு களுடன் 28 வார்டுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வளர்ந்து வரும் கோவை மாநகரின் தேவையை கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒன்றிய அரசு அளிக்கும் ஆண்டுக்கு ரூ.500 கோடி என்பது போதாது. என ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் கருத்துகளை தெரிவித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோவை, பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து, கூடுதல் நிதியை பெற அழுத்தம் கொடுப்பது என கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது.