கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது காலநிலைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிக ளில் தென்னைக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வரு கின்றனர். இது 60 நாள் பயிராக உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் அதி களவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வந் தனர். சாகுபடி அதிகரித்ததால், கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.6 முதல் ரூ.10 வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கடும் சிரமமடைந்து வருகின்ற னர். அதேநேரத்தில் சர்வதேச சந்தையில் பருத்திக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. தற் போது ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. பருத்தி 180 நாள் பயிராக உள்ளது. முன்னதாக, பருத்திக்கு நல்ல விலை கிடைக்காத காரணத்தால் பருத்தி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் மாற்று பயிர் களுக்கு சென்றனர். இதனால் மாவட்டத்தில் 10 சதவிகிதம் மட்டுமே பருத்தி பயிரிடப் பட்டு வந்தது. இதனிடையே மீண்டும் விவசா யிகள் பருத்தியை பயிரிடத் தொடங்கியுள் ளனர். பருத்தியை சேமித்து வைக்க முடியும் என்று கூறும் விவசாயிகள், அதற்கான அரசு மார்க்கெட் உள்ளதாக தெரிவிக்கின்றனர். தற் போது பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு 20 சத விகிதம் அதிகரித்துள்ளது. பருத்திக்கான உற் பத்தி செலவு சின்ன வெங்காயத்தை விட குறைவு. ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவா கும். ஆனால் வெங்காயத்திற்கு ஒரு ஏக்க ருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் செல வாகும். சின்ன வெங்காயம் கை கொடுக்காத தால் பருத்தியை நோக்கி பயணிக்கும் விவ சாயிகள், அரசு தங்கள் விளைபொருட்க ளுக்கு உரிய விலை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற னர். -கே.எஸ்.எம்