districts

img

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை துவங்கியது

திருப்பூர், செப்.23- கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத் தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம், கைத்தறி ரகங்களுக்கு 30சதவீதம்  தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன்  கோவில் அருகே கோ-ஆப்டெக்ஸ் விற்பனை  நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் விற்ப னையை தொடங்கி வைத்தார். தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தில் பல் வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற் பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளு டன் கூடிய பட்டு, பருத்தி, சேலைகள், போர் வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை  உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு  ரகங்கள், ஆண்கள் அணியும் சட்டைகள், பெண்கள் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கா னிக் பருத்தி சேலைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி விற் பனை இலக்காக ரூ.1 கோடியே 50 லட்சம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ ஆப்டெக்சின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30  சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி உதவி  இயக்குநர் கார்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸ்  முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.