இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடா ளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். இந்நிலையில், சனியன்று அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம், சின்னகடை வீதி பகுதி யில் நடைபயிற்சியின் போது, சாலையோர வியாபாரிகளிடம் வாக்குசேகரித்தார். அப் போது அங்கிருந்தவர்கள் தமிழக முதல்வர் முன்நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சிறிய தேநீர் கடைக்குள் சென்று, திமுக நிர்வாகி களுடன் தேநீர் அருந்தி, வாக்குசேகரித் தார். இந்நிகழ்வில், திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபகதி, மாவட்டச் செய லாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.