districts

img

சிஐடியு அமைப்பு தின கொடியேற்றம்

தாராபுரம், மே 30- இந்திய தொழிற்சங்க மையத்தின் அமைப்பு தினம் தாராபுரத்தில் கொண்டாடப்பட்டது. சிஐடியு 53 ஆவது அமைப்பு தின விழா தாராபுரம் சிஐடியு  அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங்க தலைவர் பி. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்த ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், மேக வர்ணன், கண்ணுச்சாமி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.