கோவை, மே 2- சுரண்டலற்ற சமூகம் உருவாகும் போது தான் தொழிலாளிக்கான விடி வெள்ளி உருவாகும் என கோவையில் நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத் தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். 138 ஆவது மே தினத்தை ஒட்டி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று தல் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடை பெற்றது. கோவையில் சிஐடியு மற்றும் ஏஐடி யுசி சங்கத்தினர் பங்கேற்ற மே தின பேரணி புதனன்று நடைபெற்றது. காந் திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலை யம் அருகே தொடங்கிய இப்பேரணி நஞ்சப்பாசாலை, 100 அடி சாலை வழி யாக டாடாபாத் ஆறுமுக்கு பகுதியில் நிறைவடைந்தது. இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற் றினார். அப்போது சிஐடியு மாநிலச் செயலா ளர் சுகுமாறன் பேசுகையில்:- கம்யூனிஸ் டுகள் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்று போராடு கிறோம். இந்த பொதுத்துறை நிறுவ னங்கள் உருவாக்கப்பட்டதற்கு கம்யூ னிஸ்ட் அமைப்புகளுக்கு பெரும் பங்கு உள்ளது. இவ்வளவு பாடுபட்டு உரு வாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு எளிதில் கொடுத்து விடலாம் என்று சொன்னால் கம்யூனிஸ் டுகளுக்கு கோபம் வராதா? பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மற்றவர்களை விட கம்யூனிஸ்டுகள் எப்போதும் முன்னணி யில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கும் கேர ளாவுக்கும் பலமுறை படை எடுத்து வந்த பிரதமர் மோடி இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்தும் அவர்களது நலன் குறித்தும் ஒரு வார்த்தையாவது பேசினாரா? வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கேரளாவும் தான் சிங்கப்பூரை போல தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வட மாநில தொழிலாளர்களுக்காக என்ன செய் தார்? அவருக்கு முன்பிருந்த ஆட்சியா ளர்கள் என்ன செய்தார்கள்? எல்லாமே விதி என்று சொல்லிக்கொண்டு அதை தம்மால் மட்டுமே மாற்ற முடியும் என்று சொல்லி வட மாநில மக்களை நம்ப வைத்து பாஜக ஏமாற்றிக் கொண்டி ருக்கிறது. சாதி மற்றும் மதங்களின் பெய ரால் மக்கள் மூடர்களாக இருப்பது தான் பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க் கும் நல்லது என்று கருதுகிறார்கள். இதைத்தான் செங்கொடி இயக்கம் எதிர்த்து வருகிறது.
வேலை தேடி வந்திருக்கும் வட மாநிலத்தவர்களை அன்போடு அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அவர்களை எதிரியாக பார்ப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. அவர்களின் உழைப்பை முதலாளிகள் 14 மணி நேரம் வரை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொண்டு உழைக்கும் மக்களின் சக்தி என்ன என்பதை புரிய வைக்க வேண் டும். சுரண்டலற்ற சமூகம் உருவாகும் போது தான் தொழிலாளிக்கான விடி வெள்ளி உருவாகும். ஆட்சி அதிகா ரம் தொழிலாளர்களின் கைகளுக்கு வந் தால் தான் நாம் இன்று படும் கஷ்டங்க ளில் இருந்து எல்லாம் விடுபட முடியும் என்றார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்ட தலைவர் கே. மனோகரன், செயலாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏஐடியுசி மாநில செய லாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில், கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் செங்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். பொள்ளாச்சியில் செஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் திடலில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆர்.பழனிசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.பாலகி ருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தாலுகா செயலாளர் எம்.அன்பர சன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற் றினர். இதேபோன்று மாவட்டம் முழுவ தும், சிஐடியு சார்பில் பல்வேறு இடங்க ளில் மேதின கொடியேற்று விழா நடை பெற்றது.
திருப்பூர்
138ஆவது மே தின கொடியேற்று நிகழ்ச்சி, திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் புதனன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், செங்கொடியை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.திருச் செல்வன் ஏற்றி வைத்தார். இதைதொ டர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொடியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றி வைத் தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் உட் பட கட்சியின் நிர்வாகிகள், தொழிற்சங் கம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட திரளானோர் பங் கேற்றனர். இதையடுத்து, ஏஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் அரிசிக்கடை வீதியில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி சார்பில் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., தலைமை ஏற்க, சிஐடியு சார்பில் டி.ஜெயபால் வரவேற்றார். ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் மற் றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னருமான கே.சுப்பராயன், சிஐடியு மாநி லத் துணைப் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், பிஎஸ்என்எல் வி. பழனிச்சாமி, ஏஐடியூசி பி.ஆர்.நடரா ஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் மாநகரம், ஒன்றியப் பகுதி கள், வேலம்பாளையம், பல்லடம், பொங்கலூர், காங்கேயம் உள்பட பல பகுதிகளிலும் மே தினக் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.
திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூரில் மே தின கொடியேற்று விழாவில் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி தலை மையில் வடக்கு ஒன்றிய விவசாய சங்க தலைவர் கே.ரங்கசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், தொழிற்சங்க நிர்வாகிகள், வெகுஜன அமைப்புக ளின் நிர்வாகிகள் உட்பட தொழிலா ளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆத்துப்பாளையம் பகுதியில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், முன் னாள் மாமன்ற உறுப்பினர் மாரப்பன் செங்கொடியை ஏற்றி வைத்தார். உடு மலை நகராட்சி அலுவலகத்தின் முன் பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் விஸ் வநாதன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எல்லம்மாள், விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். ஜெதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை நகரச் செயலாளர் கே. தண்டபாணி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். நிறைவாக சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். ஜோசப் நன்றி கூறினார். மடத்துக்குளம் நால்ரோடு பகுதி யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு கட்டிட கட்டுமான சங்கத்தின் தாலூகா செயலாளர் ஆர். பன்னீர்செல் வம் தலைமை வகித்தார். சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் சிறப்பு ரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உடுமலை சங்க அலுவலகத்தில் சிறப்பு தொழிற்சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது. இந்த வகுப்பிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எ.ராணி தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் துவக்கி வைத் துப் பேசினார். இதில், மனிதகுல வர லாறு என்ற தலைப்பில் சங்கத்தின் முன் னாள் மாநிலச் செயலாளர் அ. நிசார் அகமது, அரசும் – அரசு ஊழியரும் சமூக கடமையும் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
அவிநாசியில் சிஐடியு - ஏஐடியுசி சார்பில் மேற்கு ரத வீதியில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி முத்துசாமி தலைமையேற்றார். இத னைத் தொடர்ந்து சிஐடியு ஏ.சண்மு கம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துகண்ணன், ஏஐடியுசி மாநி லச் செயலாளர் என்.சேகர், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி, சிஐடியு நிர்வாகிகள் அ.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.வெங்கடாசலம், ஆர்.பழனிசாமி, கனகராஜ், செல்வி, ஏஐடியுசி நிர்வா கிகள் சண்முகம், செல்வராஜ், சுப்பிரம ணியம், உட்பட பலர் கலந்து கொண்ட னர். தாராபுரம் நகரில் சிஐடியு சங்கங்க ளின் சார்பிலே மே தின ஊர்வலம் சிறப் பாக நடைபெற்றது. புதன்கிழமை நடை பெற்ற மே தின ஊர்வலம் பொதுக்கூட் டத்தில் சிஐடியு சார்பில் கே.மேகவர் ணம் தலைமை தாங்கினார். சிஐடியு கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ், சிஐடியு போக்குவரத்து சங்க நிர்வாகி எஸ்.சதீஸ்வரன், கி. ஸ்ரீரங்கராயன் தமிழ்ச்செல்வி கே ராஜேந் திரன் ஆகிய உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன் பங்கேற்று சிறப்புரை ஆற்றி னார். இதில் திரளானோர் கலந்து கொண் டனர். திருப்பூர் ரயில்வே கூட்செட் வளா கத்தில் திருப்பூர் மாவட்ட ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் சிஐ டியு சங்கத்தின் சார்பில் மே தின கொடி யேற்று விழா நடைபெற்றது. கூட்செட் சிஐடியு தலைவர் எஸ்.எம்.பழனிச் சாமி தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், செயலாளர் டி.ஆறுமுகம் வர வேற்றார். சிஐடியு தமிழ் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.திருச் செல்வன் செங்கொடியை ஏற்றி வைத் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வி ழாவில் சுமைப்பணித் தொழிலாளர்கள் பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக சங் கப் பொருளாளர் ஏ.சுப்பிரமணி நன்றி கூறினார். வஞ்சிபாளையம் ரயில்வே கூட்செட் வளாகத்தில் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினரும், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினருமான பி.முத்துசாமி செங் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு விசைத்தறி சம்மேளனக்குழு உறுப்பி னர் குட்டி வி.மோகனசுந்தரம், மாவட் டப் பொரளாளர் கே.முருகன், வார்டு உறுப்பினர் கே.குமரவேல், கதிர்வேல், மோ.தேவிகா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.