ஈரோடு, பிப்.3- பாதுகாப்பு கேட்டு போராடிய தொழிலா ளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண் டித்து சிஐடியு சார்பில் பெருந்துறை சிப்காட் ஐஓசி ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பாட்ட லிங் பிளான்ட் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள், பணி பாதுகாப்பு டன் கூடிய சமூக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை எழுந்தது. இதனை வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் வாறு போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி பிளான்ட் தொழிலாளர்களை நிர்வாகம் பழி வாங்கும் நோக்கத்துடன் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. இவ்வாறு பணி பாதுகாப்பு கேட்டு போராட் டம் நடத்திய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததையும் கண்டித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐ டியு உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய லாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணி ஈஸ்வர மூர்த்தி, சிஐடியு தாலுக்கா செயலாளர் குப்பு சாமி மற்றும் மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் வாழ்த்தி பேசினார். திரளான தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.