districts

img

குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை, ஆக.11 - உடுமலை அருகே குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.  உடுமலை ஊராட்சி ஒன்றியம் ஆர்.வேலூர் ஊராட்சி யில் சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இது குறித்து பலகட்ட போராட்டங்களை நடத்தியும்  எவ்வித தீர்வும் கிடைக்காத காரணத்தால் 10ஆம் தேதி ஆர். வேலூர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்  நடத்தினார்கள். இதே ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த மாதம்,  உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குடிநீர் முறையாக  வழங்காமல் இருப்பதை கண்டித்து, ஒன்றிய அலுவலகத்தில்  காத்திருப்பு போராட்டம் நடத்தினார், என்பது குறிப்பிடத்தக் கது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், புதிய குடிநீர்  திட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செயல்படத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை எங்களுக்கு குடிநீர்  கிடைப்பது இல்லை. நாங்கள் பலமுறை போராட்டம் நடத் தியும் எங்களுக்கு குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள்.