districts

img

மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியத்தை நிர்ணயித்திடுக பீடி, சுருட்டு தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஈரோடு, ஜுன் 29-  பீடி சுருட்டுதல், பேக் கிங் ஆகியவற்றில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரமாக நிர்ணயித் திட வேண்டும்  என சிஐடியு  வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கம் சிஐடியுவின் 54ஆவது மாநாடு ஈரோடு  கே.துரைசாமி நினைவரங்கில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் எஸ்.கைபானி தலைமை வகித்தார். கே.ஏ.கமால்தீன் கொடி  ஏற்றினார். பி.சித்தாராபேகம் வரவேற்றார்.  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றி னார்.  இதில், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு கன்வீனர் ஆர்.சரோஜா, டாஸ் மாக் ஊழியர் சங்க செயலாளர் வை.பாண்டி யன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மாதவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.          இதில், பீடி சுற்றுதல் அல்லாத பேக்கிங்,  லேபிள் பிரிவுகளில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு ஊதிய மறுநிர்ணயம் செய்து அர சாணை வெளியிட வேண்டும். சேமநல திட்டத் தில் கல்வி உதவித் தொகை பெற வழிமுறை களை எளிமைப்படுத்த வேண்டும். சொந்த வீடில்லாத தொழிலாளர்களுகு்கு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு திட்டத்தில் வீடு வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்ட தலைவராக எஸ்.கைபானி, செய லாளராக ஆர்.செந்தில்குமார், பொருளாள ராக பி.ஷாஜாதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் கே.திருச்செல்வன் நிறைவுரை யாற்றினார். முடிவில் பி.தர்மலிங்கம் நன்றி  கூறினார்.

;