கோவை சிங்கை நகரக்குழுவிற்குட்பட்ட ஜி.எம். நகரில் உள்ள பாரதி படிப்பகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று குழந்தை களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக, இந்த பாரதி படிப்பகத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்தனர். இம்மாணவர் களுக்கும் பாராட்டு விழா மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்றுநருக் கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் மற்றும் அவரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.