சேலம், மார்ச் 3- எடப்பாடி பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் திமுக சார்பில் சனியன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலா ளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, எடப்பாடி தொகுதி தேர்தல் பார்வையாளர் பரணி மணி, நகரச் செயலாளர் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், ஒன்றியச் செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.