நாமக்கல், பிப்.6- திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. சுதந்திர போராட்ட காலத்தில் காந்திய கிராமிய பொருளா தார கொள்கைகளை நடைமுறைப்படுத்த சபர்மதியில் காந் திய ஆசிரமத்தை காந்தியார் தொடங்கி அதை நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காந்தி ஆசிரமங்கள் தொடங்கப்பட்டது. அதன்படி திருச்செங்கோட் டில் ராஜாஜி, பெரியார் ஆகியோருடைய முயற்சியால், திருச் செங்கோடு புதுப்பாளையம் ரத்ன சபாபதி என்ற ஜமீன்தார் கொடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் காந்தி ஆசிரமம் தொடங் கப்பட்டது, காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் காந்தி ஆசிரமத் தலைவர் ஆரவ் அமுதன் தலைமை வகித்து, வரவேற்பு உரையாற்றினார், காந்தி ஆசிரமம் வர லாறு குறித்து காந்தி ஆசிரமப் பொருளாளர் குமார் எடுத்துக் கூறி னார். சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் துணைத் தலைவர் எம்.என்.ரெட்டி, மகேந்திரா கல்வி நிலை யங்களின் நிறுவன தலைவர் எம்.ஜி.பரத் குமார், புதுப்பாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சுதந்திரப் போராட்ட தியாகி கள், காந்தி ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.