districts

img

முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு

தியாகி ரத்தினசாமியின் பால்ய கால நண்பரும், அவரது  சம்பந்தியுமான, மங்கலம் அரசி னர் மேல்நிலைப் பள்ளி முன் னாள் மாணவர் பேரவை தலை வர் சி.வி.விநாயகம், ஆண்டு தோறும் தியாகி ரத்தினசாமியின் நினைவு தினத்தன்று, இடு வாய் ஊராட்சிக்குட்பட்ட அரசினர்  பள்ளிகளில் பயின்று முதலிடம்  பெற்றுள்ள மாணவ, மாணவிய ருக்கு ரொக்கத் தொகை மற்றும் புத்தகம் பரிசளித்து வருகிறார். அதன்படி 22 ஆம் ஆண்டு  நினைவு தினத்தில், 8 மாணவர்க ளுக்கு ரூ. 17,000 ரொக்க பரிசை  அறிவித்து மேடையில் தலை வர்கள் மூலம் அந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அதன்படி, சின்னக் காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு  மாணவி காவியா, ஆட்டையம்பா ளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு  மாணவன் சதீஸ்வரன், சீராணம் பாளையம் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் சபரி கணேஷ், இடு வாய் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி எஸ்.தன்யா ஆகியோ ருக்கு தலா ரூ.1000 பரிசளிக்கப் பட்டது. இடுவாய் பாரதிபுரம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட் டாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.பிரபஞ்சனி ரூ.2,500 பெற்றார்.இடுவாய் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற ஷாலினி ரூ.3500, இரண் டாம் இடம் பெற்ற மகாலட்சுமி ரூ.2000 பெற்றனர். மங்கலம் அரசினர் மேல்நி லைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் சற்குரு ரூ. 5000 பெற்றார். இந்நிகழ்வில் ஊராட்சித் தலை வராக இருந்த ரத்தினசாமி, இந்த  ஊராட்சியில் கல்வி வளர்ச்சிக் காக செய்த பணிகளை சி.வி.விநாயகம் நினைவு கூர்ந்தார்.