தருமபுரி, டிச.7- பாலக்கோடு அருகே விதிகளை மீறி செயல்பட்டு வரும் சமையல் எரிவாயு குடோனை, அகற்ற வேண்டும் என வலி யுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வட் டாட்சியரிடம் புகாரளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி, 1 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோடு - பெல்ரம்பட்டி பிரதான சாலையோரம் தனியார் சமையல் எரிவாயு ஏஜென்சி கட்டடத்தில் விபத்து ஏற்படும் வகை யில், 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வைத்து உள்ளனர். மேலும், விதிமுறை களை மீறி உணவகம் உள்ளிட்ட கடைக் காரர்களுக்கு சமையல் எரிவாயு கிலோ கணக்கில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும்போது, பாதுகாப்பற்ற முறை யில் சிலிண்டர்களை நிரப்புவதால் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பகல், இரவு நேரங்க ளில் அடிக்கடி காதை பிளக்கும் அள விற்கு சத்தம் வருவதால், குழந்தைகள், முதல் முதியவர்கள் வரை பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமையல் எரிவாயு குடோனை இப்பகுதியில் இருந்து அப் புறபடுத்த வலியுறுத்தி பாலக்கோடு வட் டாட்சியரிடம் புகாரளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஆறு முகம், விசாரணை செய்து உரிய நடவ டிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவ லருக்கு பரிந்துரை செய்வதாக உறுதிய ளித்தார்.