அவிநாசி, ஜன.29- விசைத்தறி வேலைநிறுத்தத்தை விளக்கி திருப்பூரில் 25 மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது என அவிநாசியில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவிநாசியில் சேவூர் சாலையி லுள்ள சிஐடியு அலுவலக கட்டிடத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளன மாநில தலை வர் முத்துசாமி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ. சரவணன், சேவூர் தொமுச கணேசன், சிஐடியு பழனிசாமி, ஏஐடியுசி விசைத் தறி செயலாளர் செல்வராஜ், எம்எல்எப் பாண்டியராஜ், குமார், ஏடிபி நடராஜ், ஐஎன்டியூசி நவநீதகண்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி களுக்கு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்த கோரியும், 2 லட்சம் விசைத் தறியாளர்களின் குடும்ப வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் மாவட்ட முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இதன்ஒருபகுதியாக, எதிர்வரும் ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் அவிநாசி, பெரு மாநல்லூர், கணக்கம்பாளையம், மங் கலம், தெக்கலூர், சுல்தான் பேட்டை உள்ளிட்ட 25 இடங்களில் பிரச்சார கூட் டங்களை நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.