districts

img

மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விருந்தினராய் வாங்க!

அவிநாசி, ஆக.21 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மத நல்லிணக்க ஒருங்கிணைப்பு, மனிதநேய மேம்பாட்டு விழா அவிநாசியில்  நடைபெற்றது. விருந்தி னாய் வாங்க என்ற தலைப்பில் பல்வேறு மதத் தினரும் பங்கேற்ற விருந்து நிகழ்வு அனைவரி டையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துவ தாக அமைந்தது. சர்வதேச மனிதநேய நாளையொட்டி ஆக.19 சனியன்று நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.  தொழிலதிபர் ரிஃபாய், திருமுருகநாதர் திரும டம் சுந்தரராச அடிகளார், பிலதெல்பியா கிறித் துவ சபை அபிலாஸ், அவிநாசி ஹஜ்ரத் பிலால், தேவராயன்பாளையம் ஹஜ்ரத் மன் சூர் ஆகியோர் மத நல்லிணக்க உரையாற்றி னர். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர் வாகி ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரி தமிழ்துறை பேராசிரியர் போ. மணிவண் ணன் மத ஒற்றுமை குறித்து பேசினார். சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்ற தொலைக்காட்சி  புகழ் அவிநாசி லக்ஷணாவுக்கு நினைவுப் பரிசு  வழங்கப்பட்டது. விருந்தினராய் வாங்க நிகழ்ச்சிக்கு அறுசுவை உணவு வழங்கிய ஜே. ஏ.எம் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தாருக்கு ஆசி ரியை சுசீலா நினைவு பரிசு வழங்கினார். புதுப் பாளையம் முன்னாள் ஊராட்சிமன்ற தலை வர் முருகன், அவிநாசி தமுஎகச பொறுப் பாளர்கள் வே.தினகரன், க.சம்பத்குமார் ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.