மின் கம்பம் மாற்றி அமைக்க லஞ்சம்
நாமக்கல், டிச.24- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த வெப் படை அருகே உள்ள பாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல் வராஜ். இவர் தனது விவசாய நிலம், சிவா நகர் பகுதி யில் உள்ளதாகவும், அதில் விவசாய நிலத்திற்கு நடுவில் உள்ள மின்கம்பம் தனக்கு இடையூறாக இருப்பதாகவும், அதை மாற்றி அமைக்க வேண்டி வெப்படை மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள உதவி பொறி யாளரை அணுகி, விண்ணப்பம் அளித்துள்ளார். அப் போது, மின் கம்பத்தை மாற்றி அமைக்க 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி செல்வராஜ், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தட விய 35 ஆயிரம் ரூபாயினை செல்வராஜிடம் கொடுத்து அழைத்துச் சென்றனர். லஞ்ச ஒழிப்புகாவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில், 7க்கும் மேற் பட்ட காவல் துறையினர் சென்றனர். அப்பொழுது விவ சாயி செல்வராஜ், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த செயற் பொறியாளர் முத்துசாமி என்பவரிடம், ரசாயன தடவிய நோட்டுகளை வழங்கியுள்ளார். அப்பொழுது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், பணத்தை பெற்ற செயற்பொ றியாளர் முத்துசாமியை பிடிக்கும் பொழுது, அருகில் இருந்த உதவி பொறியாளர் ரஞ்சித் அந்த பணத்தை பெற்றுள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி னர். இதன்பின் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
உதகையில் சாக்லேட் திருவிழா
உதகை, டிச.24- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகை யில், 14 ஆவது ஆண்டு சாக்லேட் திருவிழா நீலகிரி மாவட் டத்தில் துவங்கியது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டம் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்க ளின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகம் படுத்தினர். ஆங்கிலேயர்களால் அறிமுகப்ப டுத்தப்பட்ட ஹோம் மேட் சாக்லேட் உதகைக்கு வரும் சுற்று லாப் பயணிகள் மட்டுமின்றி உதகையில் உள்ள மக்களிட மும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கிறிஸ்து மஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் சனியன்று 14 ஆவது ஆண்டு சாக்லேட் திருவிழா தொடங்கி யது. இந்தியாவின் முதல் சாக்லேட் அருங்காட்சியகமான எம் அண்ட் என் சாக்லேட் நிறுவனம் தனது சாக்லேட் திருவி ழாவை உதகையில் துவங்கியது. இந்த சாக்லேட் திருவிழா வின் சிறப்பம்சமே கேரளாம், கர்நாடகா, இமாச்சல், கோவா, மத்திய பிரதேசம் உத்திர பிரதேஷ் காஷ்மீர் உள்ளிட்ட 28 மாநி லங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடு வதற்காக தனி சுவையை பிரதிபலிக்கும் வகையில் ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட் டுள்ளது. சாக்லேட்களை கொண்டு மூன்று இளம் பெண்களின் உரு வத்தை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அதோடு சாக்லேட்டுகளால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்திய வரைபடங்கள், ஐஸ்கிரீம், லாலிபாப் உள்ளிட்ட வடி வங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும், சர்க்கரை நோயா ளிகள் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட் உட்பட 500 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளது. கிறிஸ் துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பத்து நாட் கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை மின்தடை
நாமக்கல், டிச.24- நாமக்கல் மாவட்டம், உஞ்சனை துணை மின் நிலையத்தில் செவ்வா யன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் உஞ்சனை, சாலப்பாளை யம், குமரமங்கலம், ராயர்பா ளையம், மண்டகபாளை யம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளை யம், சமுத்திரம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பா ளையம், கோலாரம், சரிச்சி பாளையம் உள்ளிட்ட பகுதி களில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக் காது.