நாமக்கல், பிப்.20- கண்ணூர் பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர் பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான கிளைக் கூட்டம் கண்ணூர் பட்டி விநாயகர் கோவில் திடலில் டி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் பாதுகாவலர்களும் கலந்து கொண்டனர். பின்பு இக்கூட் டத்தின் முடிவில் 34 உறுப்பினர் பதிவு சேர்க்கப்பட்டது. இதில் கிளைத்தலைவராக டி.முருகேசன், செயலாளராக பி.அபி மன்னன், கிளைப் பொருளாளராக ஆர்.ராணி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.