districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உக்கடம் பெரியகுளத்தில் விரைவில் படகு சவாரி 

கோவை, ஜூலை 4–  உக்கடம் பெரிய குளத்தில் விரைவில் படகு சவாரி துவக் கப்படுவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருவாதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கம் பெரிய குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி புரைமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடை பயிற்சி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள், விளையாட் டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவ கம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீடடிலும்,  வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி  மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங் குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனர மைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்வம்பதி மற்றும்  குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனர மைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது அனைத்து குளங்களிலும் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடை பெற்றது. அதன் பின்னர் நிரந்தரமாக பட சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு  சவாரி விரைவில் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியகுளத்தில் 4  இருக்கைகள் கொண்ட 2 படகுகள், 2 இருக்கைகள் கொண்ட  1 படகு, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகு ஆகியவற்று டன்  படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு மாதத் தில் கொண்டு வரப்படும். இதில் மோட்டார் படகு தற்போது தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தனர்.

மின் இணைப்பு தராமல் அலைகழிப்பு  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு

சேலம், ஜூலை 4 - ஆறு வருடமாக மின் இணைப்பு தராமல் அலுகழிப்பு ஏற்படுத்திய  மின்வாரிய அதிகாரியை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் ஒருவர்  தீக் குளிக்க முயற்சி செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் இரும்பாலை அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது மறைத்து வைத்திருந்த மண்ணென்னை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்கு ளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  இதனையடுத்து விசாரிக்கையில், மல்லமூப்பம்பட்டி பகு தியில் வீடு கட்டி கடந்த ஆறு வருடமாக குடியிருந்த வருகி றோம். தனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் நானும் எனது குழந்தைகளும் வசித்து வருகி றோம். எங்கள் விலாசத்திற்கு ரேஷன் கார்டு ஆதார் அட்டை  உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் உள்ளது. நாங்கள் குடியி ருக்கும் அதே பகுதியில் 16 குடும்பங்கள் உள்ளது. தனது வீட்டுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கவில்லை. மல்லமூப் பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித் தும் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  மின் இணைப்பு இல்லாமல் வீட்டில் வாழ முடியாமல் தவித்து வருவதாகவும் இருட்டில் வாழ்வதைவிட உயிரை விடுவதே மேல் என நினைத்து இன்று ஆட்சியர் அலுவல கத்தில் வந்து தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தெரிவித் தார்.

நூதன முறையில் ரூ.7.5 லட்சம் மோசடி - ஒருவர் கைது

கோவை, ஜூலை 4- அடகு நகையை மீட்க பணம் தேவைப்படுவதாகக்கூறி, கோவையில் 3 பேரிடம் ரூ.7.5 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (42). நகை வியாபாரியான இவருக்கு, தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார் (38) என்பவர் கடந்த ஜூன் 18 ஆம்  தேதியன்று கைப்பேசியில் தொடர்பு கொண்டு, நான் ஆர்.எஸ். புரம் டி.பி.ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.ஒரு லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்ட பின்னர் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரி வித்துள்ளார். இதையடுத்து, மோகன்ராஜ், அசோக்குமாரி டம் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து பணத்தை திரும்ப கேட்க மோகன்ராஜ், அவரை தொடர்பு கொண்டபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை. இதில்,  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்ராஜ், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே அசோக்குமார், காந்திபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ.3.5 லட்சமும், ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்ற  நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சமும் பெற்று மோசடி செய்துள் ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல் துறை யினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அசோக்கு மாரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அசோக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசார ணையில், அசோக்குமார் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் பொறியாளராக பணி யாற்றி வந்ததும், இவர் சிவகாசியில் பட்டாசு தொழிற் சாலை நடத்தி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், வேலையை இழந்ததாலும் அவர் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு விருதுநகர், சிவ காசி உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்தடை

ஈரோடு, ஜூலை 4- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி கள் நடைபெற உள்ளது. இத னால் பெருந்துறை கோட் டத்தைச் சார்ந்த சிப்காட்  பெருந்துறை, நகர் பெருந் துறை, வடக்கு பெருந்துறை,  கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் வளாகம், சின்னவேட் டுபாளையம், பெரியவேட்டு பாளையம், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், ராஜவீதி, லட்சுமிநகர், தாளக் கரைபுதூர், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய் யப்பா நகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவுநகர், குன்னத்தூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது

திருப்பூர் ஜூலை 4- யஷ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரயிலில், கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை திருப் பூர் ரயில்வே காவலர்கள் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது  இளம்பெண் கர்நாடகாவில் கல்லூரியில் படித்து வருகிறார்.  இவர் கர்நாடகாவிலிருந்து கோழிக்கோட்டுக்கு யஷ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரயிலில் சென்று கொண்டி ருந்தார். ரயில் நள்ளிரவு 2மணிக்கு ஈரோட்டில் இருந்து  திருப்பூர் வந்து கொண்டிருந்தபோது, இளம்பெண் பய ணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே  இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும், ரயில்வே காவலர்களி டம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலர்கள் கல்லூரி  மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பெங்களூரில் பணியாற்றி வரும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புலக்காட்டுக்காரா பகு தியை சேர்ந்த ஜியோ ஜார்ஜ் (39) என்பது தெரியவந்தது.. மேலும் அவர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டதை ஒப்புக் கொண்டதையடுத்து, ரயில்வே காவலர்கள்  அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரிச்சிபாளையம் பள்ளியில் கூடுதல்  வகுப்பறைகள் ஏற்படுத்த கோரிக்கை

திருப்பூர், ஜூலை 4- திருப்பூர் பெரிச்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியில்  மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்க கூடுதல் வகுப்பறை கள் கட்டித் தர வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி  சுந்தரபாண்டியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர், முதன்மை  கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதா வது: பெரிச்சிபாளையம் நடுநிலைப் பள்ளி கடந்த இரண்டரை  ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டு செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 4 வகுப்பறை கட்ட  ரூபாய் 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால்  இன்னமும் அதற்கான பணி துவங்கப்பட வில்லை. ஒரே வளா கத்தில் துவக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் செயல் பட்டு வருகிறது. காலையில் நடைபெறும் வழிபாட்டுக்கூட் டம் இரண்டும் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. துவக்கப் பள்ளிக்கு 12 வகுப்பறைகளும், உயர்நிலைப் பள்ளிக்கு 8  வகுப்பறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்கப் பள்ளி யில் சுமார் 650 மாணவர்களும், உயர்நிலைப் பள்ளியில் சுமார்  550 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றார்கள். உயர்நி லைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 6,7,8 ஆகிய  வகுப்பு மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட் டுமே வருகை புரிந்து வருகிறார்கள். இம்மாணவர்கள் வளரி னம் பருவத்து குழந்தைகள் ஆவர். அவர்கள் பள்ளிக்கு வரா மல் திசை மாறுவதைத் தடுக்க வேண்டுமெனில் தினமும் பள் ளிக்கு வருகை தர வேண்டும். மேலும் பள்ளியின் மேற்கூரை யில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் கொடையாளர் கள் சார்பிலும் கட்டிடத்தின் மேல் தகரத்தில் வேய்ந்து தருவ தற்கும் தயாராக உள்ளனர். எனவே மேல் தளத்தில் கூரை வேய அனுமதியும் அல்லது வேறு ஏதாவது வகையில் வசதி  செய்து கொடுத்து அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு  வரவழைத்து கல்வி போதிக்கும் சூழலை ஏற்படுத்தி தரும்படி  கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பிரச்சனையால் இங்கு 5 ஆம் வகுப்பில் படித்த  மாணவர்களும், தற்போது 7, 8 வகுப்பில் படிக்கும் மாணவர்க ளும் சுமார் 150 பேர் வேறு பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என் பதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கு மாறு பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக சுந்தர பாண்டியன் கூறியிருக்கிறார்.

சாலையோர சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல்   ஏலத்தை ரத்து செய்யக்கோரி சிஐடியு மனு

தாராபுரம், ஜூலை 4 -  தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சாலை யோர சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல்  செய்ய ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி  சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளிக்கப்பட்டுள்ளது.  தாராபுரம் தாலுகா பொதுத்தொழிலாளர்  சங்கம் சிஐடியு சார்பில் தலைவர் என்.கனக ராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.அம்மனுவில் தாராபுரம் நகரில் சாலையோ ரங்களில் சிறு வியாபாரம் செய்யும் நூற்றுக்க ணக்கான வியாபாரிகள் தினசரி வியாபாரம்  செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நி லையில் இதுவரை நடைமுறையில் இல்லாத  புது நடவடிக்கையாக சாலையோர வியாபாரி களிடம் தினசரி சுங்க வசூல் செய்ய தாராபுரம்  நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏழை, எளிய சிறு வியாபாரி களை கடுமையாகப் பாதிக்கும். எனவே இந்த  தினசரி சுங்க வசூல் நடவடிக்கையை ரத்து  செய்யவேண்டும்.  இதுகுறித்து நகராட்சி  அதிகாரிகளிடம் முறையிட்டால் நகராட்சி யின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டி யுள்ளது எனத் தெரிவிக்கின்றனர். அதே சம யம் தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான 250க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் முறைப் படி  வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இதில்  முறைகேடு செய்து கடைகளை உள் வாட கைக்கு விட்டு கோடிக்கணக்கான ரூபாய்  சம்பாதித்து வருகின்றனர். இதை முறைப்ப டுத்தி நகராட்சி வருவாயைப் பெருக்க வும், ஏழை, எளிய வியாபாரிகளைப் பாதுகாத் திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மனு  அளிக்கும்போது சங்கத்தின் செயலாளர் பி. பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பழனிச் சாமி, ராதா ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர் சங்க மாநாடு

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் வடக்கு தாலுகா இந்திய மாணவர் சங்க  மாநாடு கே. தங்கவேல் நினைவகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு தாலுகா தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். பூர்ணா வரவேற்றார். மாவட்ட தலை வர் பிரவீன்குமார் துவக்க உரையாற்றினார். வாலிபர் சங்க  வடக்கு மாநகர நிர்வாகி வீ.பாலசுப்பிரமணியம் வாழ்த்தி னார். தாலுகா செயலாளர் ஹரி வேலையறிக்கை சமர்ப்பித் தார். இறுதியாக புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து  வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் கோகன் நிறைவுறை யாற்றினார். தலைவராக கௌசிக், செயலாளராக கதிர வன், துணை தலைவர்களாக பொண்ணம்மாள், நாகரத்தி னம் துணை செயலாளர்களாக மதி மற்றும் ஜீவா உட்பட  13 பேர் கொண்ட புதிய தாலுகா கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட் டது. இதில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர். இறுதியாக கதிரவன் நன்றி கூறினார்.

மது போதையில் காவலரிடம் தகராறு

அவிநாசி, ஜூலை 4-  அவிநாசி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக  பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் மங்கலம் சாலை யில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மது  போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவரைத்  தடுத்து நிறுத்திய போது, அவர் காவலரை தகாத வார்த்தை யில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவிநாசி  போலிசார் வழக்குப்பதிவு செய்து அவிநாசி காந்தி நகரை  சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(32) என்பவரைக் கைது செய்தனர்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை - மதுபானக் கடையை அகற்றிடுக

தருமபுரி, ஜூலை 4- பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அரசு  மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என வடக்கு தெரு கொட்டாவூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி யிடம் மனு அளித்தனர்.  அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்‌அதியமான் கோட்டை ஊராட்சி வடக்குதெருகொட்டவூரில் இரண்டு அரசு மது பானக்கடைகள் இயங்கிவருகிறது. மதுக்கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் பெண்கள், குழந்தைகள், முதியோர் களும் விட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பெண்களுக்கு பாது காப்பு முற்றிலும் கேள்விகுறியாக உள்ளது. மாதுபிரியர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டி செல்கிறனர். இதில் அடிக் கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி இரண்டு மதுபானக் கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

உதகை, ஜூலை 4– மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதி கரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ள தால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படு கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சனியன்று கோவையில் இருந்து மஞ்சூருக்கு கடைசி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப் போது மெத்தை பகுதியில்  குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. மேலும் சாலையோரம் உள்ள மரக் கிளைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை கள், சாலையோர மரக்கிளைகளை உடைத்து சேதம் செய்து கொண்டிருந்தன.  இதனால் அரசு பேருந்து உள்ளிட்ட பின்னால் வந்த வாக னங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. பின்னர் காட்டு யானை கள் வனப்பகுதிக்குள் சென்றதும், வாகனங்கள் சென்றன.  மஞ்சூர் அருகே கெத்தை சாலையில் கடந்த நான்கு நாட்களாக மஞ்சூர், ஒக்க நாடு, கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி சோத னைச்சாவடி வரை உலா வருகிறது. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை உணர்வோடு வாகனங்கள் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள் ளனர்.  இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவ்வப் போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள் ளது. மேலும் காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது. அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை அச்சு றுத்தக் கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக் கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மயான வசதி கேட்டு தர்ணா

சேலம், ஜூலை 4-  சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுக்கா விலாரிப்பாளை யம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைக் குழந்தையுடன் மயான வசதி கேட்டு சேலம் ஆட்சியர் அலு வலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம் விலாரிப்பாளையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதி யில் இறந்தவர்களை உடல்களை அடக்கம் செய்ய அரசு  ஒதுக்கிய நிலத்தின் வழியே கொண்டு செல்ல மற்றொரு பிரி வினர் தடுக்கின்றனர்.  40 வருடமாக உள்ள இந்த பிரச்ச னையை தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அரசால் ஒதுக்கப்பட்ட மயான பாதை நிலத்தை  எங்க ளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சேலம், ஜூலை 4-  போலி ஆவணத்தை தயாரித்து ரூ50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துள்ளதாகவும், அதனை மீட்டு கொடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் புகார் அளித்தார்.  இதில், சேலம் மாவட்டம், ஊ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மகன்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், எங்களுக்கு சொந்தமான மூணு ஏக்கர் நிலம் உள்ளது அதில் விவசாயம் செய்து வருகிறோம் இந்நிலையில் எனது வீட்டின் அருகே  வசித்து வரும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜ மாணிக்கம் என்பவர் 50 லட்சம் மதிப்புள்ள 1.31 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து நிலத்தை கிரயம் செய்து கொண்டார். இதுகுறித்த விபரங்களை தெரிந்தபிறகு  அவரிடம் நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தும், எங்கள் மகன் மீது பாலியல் புகார் கொடுத்து வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத் தோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள்  நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசி ரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித் துள்ளார்.

கோவை: நிலுவையில் உள்ள தொழில் வரி ரூ4 கோடி வசூல்‌

கோவை, ஜூலை 4 –  கோவை‌ மாநகராட்சி, மத்திய மண்டல அலுவலகத்தில்  வளர்ச்சித் திட்டப்பணிகள், மழைக்காலங்களில்‌ மேற் கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்த கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கோவை மாநக ராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடை பெற்ற இக்கூட்டத்தில் கோவை ‌மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தையடுத் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிர தாப்‌, செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநகராட்சி அலுவ லர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ ஒத்துழைப்புடன்‌ பணிகள்‌ சிறப்பாக நடைபெற்று வருகிறது. நமது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 1 முதல்‌சொத்துவரி வசூல்‌ செய்யும்‌ பணி கள்‌ நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில்‌  உள்ள தொழில்வரி தற்போது 4 கோடி வரை வசூல்‌ செய்யப் பட்டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ ரா. வெற்றிசெல்வன்‌‌ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் அதிகரிக்கும் கொரோனா 

கோவை, ஜூலை 4-  கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. இந்நிலை யில், கோவை மாவட்டத்தில் திங்களன்று  ஒரே நாளில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண் ணிக்கை 3 லட்சத்து 31 ஆயி ரத்து 734 பேராக  அதிகரித் துள்ளது. இதுவரை உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை  2 ஆயிரத்து 617 ஆகும்.  கொரோனா தொற்று காரண மாக கோவை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்க ளின் திங்களன்று 162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். தற்போது வரை 798 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.





 

;