இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் 6 ஆவது வார்டு கிளை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி னர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அர்ஜுன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வாலி பர் சங்கம் சார்பில் சுமார் 315 யூனிட் ரத்தம் அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.