கோவை, ஏப்.5- கருமத்தம்பட்டி பகுதியில் அண்ணா மலை பிரச்சாரக் கூட்டத்துக்கு ஆட்கள் வராததால், பேருந்துக்கு காத்திருந்த கட்டிட தொழிலாளிகள் கையில் பாஜக கொடியை திணித்து கூட்டத்தை காட் டிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தி யது. கோவை நாடாளுமன்ற தொகுதி யில் பாஜக சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகி றார். தோல்வி பயத்தால் தான் போட்டி யிடும் தொகுதியிலேயே முடங்கியுள்ள அண்ணாமலை, வெள்ளியன்று கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச் சாரம் மேற்கொண்டார். காங்கேயம் பாளையம், காடாம்பாடி, செங்கத் துறை, சாமளாபுரம் உள்ளிட்ட இடங்க ளில் பெரிய அளவில் கூட்டம் வராததால் பிரச்சாரம் பிசுபிசுத்தது. இதனால் சுதா ரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள் கருமத்தம்பட்டி பகுதியில் கூட்டத்தை காட்டுவதற்காக நடனக் கலைஞர்களை களமிறக்கினர். அப்போதும் பெரிய அளவில் கூட் டம் சேராததால் கருமத்தம்பட்டி நால் ரோடு சந்திப்பில் பேருந்துக்கு காத்தி ருந்த கட்டிடத் தொழிலாளிகள் கையில் கொடிகளை வலுக்கட்டாயமாக திணித்து, அண்ணாமலை பிரச்சாரத் துக்கு வரும்போது கூட்டத்தை காட்டி னர். இது அங்கு பேருந்துக்கு காத்தி ருந்த பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.