கோவை, ஏப்.11- பாஜக கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பது, காவல் நிலை யத்தில் வாண்டெட் லிஸ்ட் (தேடும் குற்றவாளிகள் பட்டியல்) வாங்கிக் கொள்வார்கள் போல் இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரி வித்துள்ளார். கோவை கரும்புக்கடை பகுதி யில் ரமலான் தொழுகை முடிந்து வந்த, இஸ்லாமியர்களிடம் இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மாரை ஆதரித்து அமைச்சர் டி.ஆர். பி.ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், இது மிகவும் முக்கி யமான காலகட்டம். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுத கூடிய ஒரு காலகட்டம். பாசிச வாதிகளிடமிருந்தும், பிரிவினை வாதிகளிடமிருந்தும், இந்தியாவை மீட்க, மாநில உரிமைகளை மீட்க வேண்டிய முக்கியமான காலகட் டத்தில் இருக்கிறோம். இஸ்லாமியர்கள் மீது ஏகப்பட்ட அடக்குமுறைகள், எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வலிகளுக்கு ஆறுத லாக இருக்கும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. சமுதாயத்தில் யாரெல்லாம் தாக்கு தல்களுக்கு உள்ளாக்கப்படுகி றார்களோ, யார் மீது எல்லாம் ஒடுக்கு முறைக்கு உள்ளாகிறார்க ளோ? அவர்கள் அனைவருக்கும் பாதுகாவலராக திகழும் முதல்வர் ஸ்டாலினின் பக்கம் ஒட்டு மொத்த கோவையும் இருக்கி றது, ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது. சமூக விரோதிகளை எடுத்து விட்டால் பாஜகவில் ஆட்களே இருக்க மாட்டார்கள். அந்த கட் சியே இருக்காது. அவர்களது வழக் குகள் தொடர்பாக பட்டியல் போட்டு ஐடி விங்கில் ஒட்டி இருக்கிறோம். பாஜகவினர் சமுதாயத்திற்கு எதிரானவர்கள். சமூக விரோதிக ளாகவே இருக்கிறார்கள். சமீப காலத்தில் அவர்கள் கட்சி உறுப் பினர் சேர்க்கை என்பது காவல் நிலையத்தில் வான்டெட் லிஸ்ட் வாங்கிக்கொள்வார்கள் போல் இருக்கிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக இதை ஒத்துக் கொள்கிறார், இது எவ்வாறு சரி என்பது எங்களுக்கே புரியவில்லை என்றார். இந்த முறை, அதிமுகவி லுள்ள தாய்மார்கள், கட்டாயம் உத யசூரியனுக்குதான் வாக்களிக்கி றார்கள். அதேபோல, பாஜகவி லுள்ள பலரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க உள்ளார்கள். கோவை நாடாளுமன்ற தொகுதியில் உத யசூரியன் பிரம்மாண்டமாக வெற்றி பெரும். இந்த நிகழ்வின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தேர்தல் பொறுப்பாளர் மணிசுந்தர், பகுதி கழகச் செயலாளர் ஷேக் அப் துல்லா, மாமன்ற உறுப்பினர் ரேவதி, வட்ட கழகச் செயலாளர் அமனுல்லா, மியான்குமார், அருள் மணி, கரும்புக்கடை சாதிக் உள் ளிட்ட பலர் உள்ளனர்.