சேலம், ஜன.27- சேலத்தில் நடைபெற்ற போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் பலர் கலந்து கொண்டனர். போதை பழக்கத்திற்கு எதிராகவும், வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை மதித்து, தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என வலியுறுத்தி சேலம் மாநகர காவல் துறையும், 2 டிசி பைக்கர்ஸ் கிளப் சார்பில் 100க்கும் மேற்பட்ட பழமை யான மற்றும் வித்தியாசமான வாகனங்களை கொண்டு, இரண்டு சக்கர வாகன பேரணி சேலம் மாவட்டம், அடி வாரம் பகுதியில் நடைபெற்றது. இதனை மாநகர காவல் துணை ஆணையர் உதயகுமார், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிட்டு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு வாகன பேரணி அடிவாரம், கோரிமேடு வழியாக அஸ்தம் பட்டி வரையிலும் சென்று, மீண்டும் அடிவாரம் பகுதியில் நிறைவடைந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.