திருப்பூர், பிப்.21- வங்கி ஊழியர்களின் நலத்திட்ட பண உதவிக ளுக்கு வரி விதிப்பதை கண் டித்து திருப்பூரில் வங்கி ஊழி யர் அதிகாரிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தேவையான அளவு ஊழி யர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழியர்களின் நலத்திட்ட பண உதவிகளுக்கு வரி விதிப்பதை எதிர்த்தும் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நடத்தவுள்ளனர். அந்த போராட்டத்தை ஆத ரிக்கும் வகையில் வெள்ளியன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு வங்கி ஊழியர் அதிகாரிகள் சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். உமாநாத், கார்த்தி, ராதா கிருஷ்ணன் உட்பட திரளான வங்கி ஊழியர் கள் கலந்து கொண்டனர்.