districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர், ஜூன் 1- பல்லடத்தில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்க ளுக்கான விழிப்புணர்வு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். பல்லடம் தெற்கு வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  கழிவுநீர் அகற்றுவதற்கான உரிமத்தை வாகனத்தில் பார் வைக்குப் படும்படி வைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்பில் குறிப்பிடும் இடங்களில் உள்ள அகற்றும் வசதிக ளைத் தவிர வேறு எந்த இடத்திலோ அல்லது தளத்திலோ கழி வுகளை கொட்டுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக் கப்படும் உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி தூய்மை அலுவ லர் செந்தில்குமார், ஆய்வாளர் சங்கர், மோட்டார் வாகன ஆய் வாளர் நிர்மலாதேவி மற்றும் பல்லடம், காங்கயம், வெள்ளக் கோவில், திருமுருகன்பூண்டி ஆகிய நகராட்சி பகுதிகளைச்  சோ்ந்த கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர், வாகன  உதவியாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பனியன் நூல் விலையில் மாற்றம் இல்லை

திருப்பூர், ஜூன் 1 - பின்னலாடை தயாரிப்புக்குப் பயன்படுத் தப்படும் பருத்தி நூல் விலையில் கடந்த மாதத் தின் விலையே ஜூன் மாதமும் தொடரும் என்று நூற்பாலைகள் தரப்பினர் தெரிவித் துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக  நூல் விலையில் ஏற்ற, இறக்க மாற்றம்  இல்லாமல் தொடர்கிறது. திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்ன லாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த  ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய  மூலப்பொருளாக பருத்தி நூல் உள்ளது. கடந்த ஆண்டு நூல் விலை அடிக்கடி உயர்ந்து  வந்ததால் பின்னலாடை சிறு, குறு, நடுத்தரத்  தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நூல் விலையை குறைக்க தொழில்  துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலை யில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்த வித மாற்றமுமின்றி ஜனவரி மாத நிலையை  தொடர்ந்தது. இதேபோல் மார்ச், ஏப்ரல், மே  மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லா மல் சீராக நீடித்தது.  இந்த நிலையில் நடப்பு ஜூன் மாதத்திற் கான நூல் விலை வியாழனன்று அறிவிக்கப் பட்டது.  இதில் ஏற்கெனவே கடந்த மாத விலையே தொடரும், ஏற்ற இறக்கம் இல்லை  என்று நூற்பாலைகள் தரப்பில் தெரிவித்த தாக பின்னலாடைத் துறையினர் கூறினர். இதன்படி ஒரு கிலோ 10 ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.185க்கும், 16 ஆம் நம்பர் ரூ.195 க்கும், 24 ஆம் நம்பர் ரூ.265க்கும், 30  ஆம் நம்பர்  ரூ.275க்கும், 34  ஆம் நம்பர் ரூ.295க்கும், 40 ஆம்  நம்பர் ரூ.315க்கும், 20 ஆம் நம்பர் செமி  கோம்டு நூல் கிலோ ரூ.245க்கும், 24 ஆம் நம்பர் ரூ.255க்கும், 30 ஆம் நம்பர் ரூ.265க்கும், 34 ஆம் நம்பர் ரூ. 285க்கும், 40 ஆம் நம்பர்  ரூ.305க்கும், 20 ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.253க்கும், விற்பனை செய்யப்படுவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதூறு பரப்பும் போலி சமூக ஆர்வலர் செட்டிபாளையம் கூட்டுறவு சங்கம் புகார்

திருப்பூர், ஜூன் 1 – திருப்பூர் கே.2092 செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங் கத்தின் மீது அவதூறு பரப்பி வரும்  போலி சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை  எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும்  காவல் துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக கே.2092 செட்டிபா ளையம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தின் தலைவர் கே.ராம சாமி புதனன்று அளித்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: கே.2092 செட்டிபாளையம் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்  திருப்பூர் வடக்குப் பகுதியில் சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. விவசாயி களுக்கு பயிர்க்கடன், உடல் ஊனமுற் றோர்களுக்கு கடன், மகளிர் சுயஉதவி  குழுக்களுக்கு கடன், பொது மக்க ளுக்கு நகையீட்டு கடன் வழங்கப்படு கிறது. அரசு இ - சேவை மையம் மூலம்  மக்களுக்குத் தேவையான சான்றி தழ்களை வழங்குவதுடன், 25 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 23 ஆயி ரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி சிறப்பான முறையில் வழங்கி வருகின்றது. ஆனால் போயம்பாளையம் பிரிவு நேரு நகரில் வசித்து வரும் ஈ.பி.சரவ ணன் என்பவர் சமூக ஆர்வலர் என்று சொல்லி போலியான முறையில் செயல் பட்டு அவதூறு பரப்பி வருகிறார். குறிப் பாக அடிப்படை ஆதாரமற்ற புகார் களை வாட்ஸ் ஆப் மூலமும், பத்திரிகை  செய்தி மூலமும் தொடர்ந்து அவதூறு  பரப்பி சங்கத்தின் நற்பெயரைக் கெடுத்து வருகிறார். இவர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறை யிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கத் தலைவர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

அவிநாசி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பூர், ஜூன் 1 - திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம், அவிநாசி அரசு மருத்துவமனை, நாதம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல் படும் ரேசன் கடை, முதலிபாளையத்தில் உள்ள ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வியாழ னன்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் வகுப் பறைகள் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதி காரிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும் பொதுமக் களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விரைந்து பணி களை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வும் அவர் அறிவுறுத்தினார்.

பெண்ணுக்கு தொல்லை:  இளைஞர் மீது தாக்குதல்

கோவை, ஜுன் 1- பெண்ணுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தாக்கி யவர்களை போலீஸ் தேடி வருகிறது.  கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (22). இவர் கோவை தனி யார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.காம். படித்து வரு கிறார்.  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை,  இளங்கோவன் கடந்த சில நாட்களாக ஒருதலையாக காத லித்து வந்தார். அப்பெண் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண், பெற்றோரிடம் தெரிவித்தார். பெற் றோர் இளங்கோவனை கண்டித்துள்ளனர். ஆனால், இளங் கோவன் மீண்டும் தொல்லை கொடுத்து உள்ளார்.  இதையடுத்து, பெண்ணின் உறவினர்களான விவேக், மற்றும் பார்த்திபன் ஆகியோர் இளங்கோவனை தாக்கி யுள்ளதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்தவரை அங்கி ருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு  செய்து விவேக் மற்றும் பார்த்திபன் ஆகியோரை தேடி வரு கின்றனர்.

தருமபுரியில் குறைதீர் கூட்டம்

தருமபுரி, ஜூன் 1- தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான கூட்டம்  வெள்ளியன்று (இன்று) காலை 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க  பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.

வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

சேலம், ஜூன் 1- அஸ்தம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அருகே உள்ள சின்னை யாபிள்ளை தெரு, 7 ஆவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர்  திருநாவுக்கரசு. நூல் வியாபாரியான இவரும், இவரது மனைவி மல்லிகாவும், உறவினரின் திருமணத்திற்கு சென்று  விட்டு, புதனன்று இரவு வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர் கள் திருநாவுக்கரசின் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே  நுழைந்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு மல்லிகா எழுந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் நகை பெட்டியை  எடுத்தது தெரியவந்தது. உடனே மல்லிகாவை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மல்லிகா அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆணையாளர் பாபு, காவல் ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். நகைப் பெட்டியிலிருந்து 50 1/2 பவுன் நகையை கொள்ளையடிக்கப் பட்டு சென்றுள்ளதாக மல்லிகா போலீசாரிடம் தெரிவித் தார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் சாலை மறியல்

சேலம், ஜூன் 1- பேருந்துக்காக 4 மணி நேரம் காத்திருந்ததால், ஏற்காட் டில் சுற்றுலா பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மே 21 முதல்  28 ஆம் தேதியன்று வரை நடைபெற்றது. இதனை காண ஏற் காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். இத னால் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், புத னன்று மாலை 3 மணிக்கு ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காடு பேருந்து நிலையத்தில் காத்து கிடந்தனர். அப்போது அவர்கள் சேலத்துக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரக் கோரி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் ஆகி யோர் மறியலில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை சமாதானப் படுத்தினர். மேலும், பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதில் சமாதானமடைந்த சுற்றுலா பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதன்பின் இரவு 7 மணி அள வில் சிறப்பு பேருந்துகள் ஏற்காட்டுக்கு வந்தன. 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள், பேருந்தில் முண்டியடித்து ஏறி, இடம் பிடித்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை

தருமபுரி, ஜூன் 1- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித் தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (67). கோவில் பூசாரியான இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று, தனி யாக இருந்த 6 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் மாற் றம் ஏற்பட்டதால், சந்தேகமடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது கோவில் பூசாரி சிறுமியை பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்த னர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை யின் முடிவில் சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு உறுதியான தால், அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

வெள்ளியங்கிரி மலையேற அனுமதி இல்லை

கோவை, ஜூன் 1- கோவை, வெள்ளியங்கிரி மலையேற யாரும் வர வேண் டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.  மேற்குமலைத்தொடர்ச்சியின் ஒருபகுதியாக வெள்ளிங் கிரி மலை உள்ளது. இம்மலையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச் சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் உள்ளது.  இம்மலையில்  ஏறி வெள்ளிங்கிரி மலை உச்சிக்கு சென்று கோவிலுக்கு செல்ல வழிபட ஏராளமானோர் ஆர்வத்துடன் ஒவ்வொரு வருடமும் செல்வார்கள்.  இந்நிலை யில், மலையேறுபவர்கள் அதிகரிப்பதாலும், அவர்கள் பயன் படுத்தி தூக்கி வீசும் பொருட்களாலும் இம்மலையின் இயற்கை சூழல் சீர்கெட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியங்கிரியில் மலையேறுவதற் கான அனுமதி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்கியது. இதை யடுத்து மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், மலையேறுவதற்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், ஜூன் 1- நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக இருந்து வந் தது. இந்நிலையில், புதனன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை  விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக உயர்ந்துள் ளது. கறிக்கோழி கிலோ  ரூ.127க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.96க்கும் விற் பனை செய்யப்பட்டு வரு கிறது. அவற்றின் விலை களில் மாற்றம் செய்யப்பட வில்லை என பண்ணையா ளர்கள் தெரிவித்தனர்.

நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்

தருமபுரி, ஜூன் 1- அதியமான்கோட்டை அருகே சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்திய லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் சம் பத்குமார் தலைமையிலான போலீசார் எட்டி மரத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில் நொரம்பு மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஓட்டுநரிடம் போலீசார்  விசாரணை நடத்தினர். இதில், அவர் முத்து கவுண்டன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முத்து (26) மற்றும் எட்டிமரத்துபட்டியைச் சேர்ந்த உதவியாளர் சந்தோஷ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மண் ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து முத்து மற்றும் சந்தோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

;