நாமக்கல், ஜன.13- நாமக்கல்லில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில், விழிப் புணர்வு கையேடுகள் வெளியிடப்பட் டன. நாமக்கல்லில் உள்ள தனியார் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடை பெற்ற பெண் குழந்தைகளை காப் போம் பெண் குழந்தைகளுக்கு கற் பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை, மாவட்ட ஆட்சியர் ச.உமா தொடங்கி வைத்தார். தொடர்ந்து “பெண் குழந் தைகளை படிக்க வைப்போம்! பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” விழிப் புணர்வு பதாகைகள் மற்றும் கையே டுகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட் டார். அப்போது ஆட்சியர் ச.உமா பேசுகையில், கருவில் இருக்கும் குழந் தைகளின் பாலினத்தை தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். எனவே சட்டத்தை முழுமையாக அரசு நடைமுறைப்படுத்தி வருகி றது. ஆணும், பெண்ணும் எந்த குழந் தையாக இருந்தாலும் அதனைப் பெற்று சமூகத்தில் நல்லபடியாக, கல்வி அளித்து வளர்க்க வேண்டும். ஆண், பெண் இரண்டு குழந்தைக ளுக்குமே ஒரு சமுதாயத்தில் ஒரு பொறுப்பான நிலைக்கு வர வேண் டும். அதற்குப் பெற்றோர் தங்கள் கட மைகளை உணர்ந்து செயல்பட வேண் டும், என்றார். இந்நிகழ்ச்சியில் நாமக் கல் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், வட்டார மைய செவிலியர்கள், கிராம செவிலி யர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.