districts

img

ஒன்றிய அரசு மீது பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

சென்னை, செப்.24- சட்ட விரோத செயல்கள் அனைத்தையும், அரசியல மைப்பு சட்டம் அங்கீகரித்த தாக மாற்றும் முயற்சியை ஒன் றிய அரசு மேற்கொண்டுள்ள தாகவும் இதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை  பாதுகாப்போம்’ எனும் தலைப்பில் சென்னை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத் தரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணை யத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசு கையில், இந்தியாவில் 85 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு சமூக பாதுகாப்பு இன்றி உள்ள னர். 35 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளனர். இந்த பெரும்பான்மையி னரை, அதானி, அம்பானி போன்ற சிறுபான் மையினரிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அரசின் நிதி ஆதாரங்கள், இயற்கை வளங் களை இந்த சிறுபான்மையினர் கொள்ளை யடிக்கின்றனர். இதனை மறைக்க மத, மொழி, சமூக சிறுபான்மையினர் பிரச்ச னையை எழுப்புகின்றனர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீதி பதிகளாக மாறும் நிலையை அரசியல மைப்புச் சட்டம் உருவாக்கியது. அந்த அரசி யலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகள் களவு போய்க்கொண்டு இருக்கிறது. பெரும் பான்மை எடுக்கும் முடிவுகள் எல்லாம் நியாய மானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்ற கதவுகள் திறக்கவில்லை என்றால் சாமானியனின் நிலை என்ன? தமிழகத்தில், வீட்டிற்குள் ஜெபம் செய்ய முடியாத நிலை  உருவாகி உள்ளது. கல்லறை களில் அடக்கம் செய்ய முடிய வில்லை. மசூதிகளுக்கு வெள்ளை அடிக்க முடிய வில்லை. ஞானவாபி மசூதி வழக்கு நீதிமன்றத்தில் உள் ளது. புதிய புதிய நகரங்கள் உருவாகி உள்ள இடத்தில், 500 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று  யாருக்கு தெரியும்? இந்த வழக்கை நீதிமன் றம் எப்படி ஏற்றது? 1947ல் வழிப்பாட்டு தலங் கள் (பாபர் மசூதி தவிர) எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்ற சட் டத்திற்கு முரணாக இந்த வழக்கு உள்ளது. இதனால் சமூகத்தில் வெறுப்புதான் ஏற்ப டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமா னதை அனைத்தையும், அரசியலமைப்பு சட் டம் அங்கீகரித்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் நீதிமன்றங் கள் ஏன் தலையிட மறுக்கின்றன. இந்திய வர லாற்றில் தற்போது நிலவும் நெருக்கடி இதற்கு முன்பு வந்ததில்லை. அரசியல மைப்பு சட்டம் உருவாக்கி வைத்துள்ள ஜன நாயக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள் ளாகி உள்ளன. அமெரிக்காவில் டிரம்ப் 4 நீதிபதிகளை நியமிக்கிறார். பைடனுக்கு எதிராக செயல் படும் படி டிரம்ப் சொன்னதை, நீதிபதிகள் கேட்க மறுத்துவிட்டனர். இதுதான் ஜனநாயக  மைப்புகளின் வலிமை. எனவே, ஜனநாயக அமைப்புகளையும், அரசியலமைப்பு சட் டத்தையும் பாதுகாப்போம். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.