districts

திருப்பூரில் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர்கள்: சட்டமன்ற தொகுதிகள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர், ஜன.22- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810  வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள  பட்டி யல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர்  பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024  மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவ ணைப்படி அக்டோபர் மாதம் 27 ஆம்  முதல்  டிசம்பர் 9 ஆம் தேதி வரை பொதுமக்களிடம்  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர் சேர்த் தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படி வங்கள் பெறப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு  உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சி யர் திங்களன்று வெளியிட்டுள்ளார். இதில்,  தாராபுரம் , காங்கேயம் , அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடு மலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட 8  சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்ந்து ஆண்  வாக்காளர்கள் 11 லட்சத்து 50 ஆயிரத்து 110,  பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 94 ஆயி ரத்து 358 மூன்றாம் பாலினத்தவர்கள் 342 என 23  லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர்கள் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் நிர் வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டி யலை, வாக்குப் பதிவு அலுவலரும், உடு மலை கோட்டாட்சியருமான ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட, அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர்.

உடுமலை சட்டமன்ற  தொகுதியில், 127 ஓட்டுப்பதிவு மையங்களில்,  294 ஓட்டுச்சாவடி மையங்களில், 1 லட்சத்து  25 ஆயிரத்து 98 ஆண்கள்,  1 லட்சத்து 35 ஆயி ரத்து 555 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்த வர் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து  684 பேர் உள்ளனர். சிறப்பு முகாம் நடைபெற்ற காலங்களில், உடுமலை தொகுதியில், 2 ஆயிரத்து 168 ஆண்கள், 2 ஆயிரத்து 652 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 ஆயிரத்து 824 பேர்கள் சேர்க்கப்பட்டும், 932  ஆண்கள், 1091 பெண்கள், 1 மூன்றாம் பாலி னத்தவர் என மொத்தம் 2024 பேர்கள்  வரை பட்டியலில் நீக்கமும் செய்யப்பட்டுள் ளது. 126 மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி யில், இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்ப டையில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287  ஓட்டுச்சாவடிகளும், ஒரு லட்சத்து 13 ஆயி ரத்து104 ஆண்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து  19 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என  மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 141 பேர்கள்  பட்டியலில் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியா னதற்கு பிறகு, நடைபெற்ற முகாமில், 1750  ஆண்கள், 2080 பெண்கள் என மொத்தம் 3830  பேர்கள் சேர்க்கப்பட்டும், 672 ஆண்கள், 752  பெண்கள் என மொத்தம் 1424 பேர்கள் நீக்க மும் செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது உடுமலை  உதவி வாக்குப்பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான சுந்தரம், தேர்தல் துணை வட்டாச்சியர்கள் சையது ராபியம்மாள் (உடுமலை),  வளர்மதி (மடத் துக்குளம்) உள்ளிட்ட அதிகாரிகள் அரசியல்  கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.