districts

img

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்  என்று முழங்கி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விடுதலை வேட்கையை கற் பித்து அவர்களை ஒன்று சேர்த்து மாபெரும் அரசியல் புரட்சிக்கு வித் திட்ட சட்டமேதை அம்பேத்கர் மறைந்த தினம் இன்று (டிச.6). அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ். சிறு வயது முதலே பல்வேறு சாதிய கொடுமைகளுக்கு ஆளானார். பள் ளியில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அம் பேத்கர் மீது கொண்ட பற்றால் தனது பெயரையும் அம்பேத் கர் என்று மாற்றிக்கொண்டார். கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை உணர்ந்த அம்பேத்கர் தீவிரமாக படித்தார். லண்டன் சென்று சட்டம் பயின்ற அம்பேத்கர், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞராகப் பணியாற்றினார். அம்பேத்கர், இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தின் போது அரசியலமைப்பை வடிவமைக்கும் வரைவு குழு விற்கு தலைமை வகித்தார். வரைவு குழுவின் மற்ற உறுப் பினர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், பெரும்பாலான சட்ட வரைவுகளை அம்பேத்கர் தனியாளாக வடிவமைத் தார். மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரா கவும் இருந்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்து எண்ணற்ற தீண்டாமை கொடுமைகளை அனுபவித்து  தனது விடா முயற்சியால் சட்ட மாமேதையாக உயர்ந்த அண்ணல் அம் பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமா னார். ‘நான் இந்துவாக சாக மாட்டேன்’ என்று முழங்கி இந்து மதத்தில் காணப்பட்ட சாதிய கட்டமைப்புகளை சாடிய அம் பேத்கர் மீது தற்போது காவிச் சாயம் பூசப்பட்டு வருகிறது. வலதுசாரிகள் அம்பேத்கரை தனதாக்கிக் கொள்ள எத்த னிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைக்கு வேண்டுமானால் காவி சாயம் பூசலாம், ஆனால் அவரது சித்தாந்தத்திற்கு ஒருபோதும் சாயம் பூச முடியாது. “நான் யாருக்கும் அடிமை இல்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை” என்ற அண்ணல் அம்பேத்கரின் வைர  வரிகளை உள்வாங்கி ஒடுக்கப்பட்டு கிடக்கும் சமூகத்தின் அடிமை விலங்கை உடைப்போம். ஆதிக்கச் சிந்தனையை சட்டமேதை அம்பேத்கர் தந்த சட்டத்தால் அடிப்போம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். -செ.முத்திவீரணன்