நாமக்கல், ஜன.24- ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடம் பராமரிப்பின்றி காணப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் - குமாரபாளையத்தை இணைக்கும் சாலையாக ஆவத்தி பாளையம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோ றும் பல்வேறு தேவைகளுக்காக ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஆவத் திபாளையம் பேருந்து நிறுத்த நிழற் கூட கட்டடத்தை பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், நிழற்கூட கட்டடம் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி, பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில் கள், குப்பைகள் உள்ளிட்டவைக ளால் நிறைந்து காணப்படுகிறது. மேலும், பேருந்து நிறுத்த கட்டடமே தெரியாத அளவிற்கு அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டுள்ள தால், மதுபிரியர்களுக்கு இது பய னுள்ளதாக மாறி வருகிறது. இதுகு றித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தினந் தோறும் சம்பளத்திற்கு பணியாற்றும் தொழிலாளர்கள் காலை, மாலை நேரங்களில் ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் கூடுவது வழக்கம். மேலும், தறிப்பட்டறைக ளுக்கு வேலைக்கு வரும் தொழிலா ளர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் இந்த நிழற்கூடத்தில் படுத்து உறங்கு கின்றனர். சில நேரங்களில் கூட்டாக மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி செல்வது போன்ற செயல்களை செய்கின்றனர். மேலும், ஊராட்சி நிர் வாகம் உடனடியாக பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இப்பகுதியை போலீசார் கண்காணிக்க வேண்டும், என்றார். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ரவி கூறுகையில், இரண்டு தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், முழுவதும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிறுத்த நிழற் கூட கட்டடம் பொதுமக்கள் பேருந்து பயணிகள் பயன்படுத்தும் வகை யில், முறையான பராமரிப்பு செய்யப் படும், என்றார்.