districts

img

லேசர் ஷோ நிகழ்வில் குவிந்த மக்கள்

கோவை, ஜன.1- கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்து, ஒரே  நேரத்தில் பொதுமக்கள் வெளியே றியதால் அரசு மருத்துவமனை முன்பாக கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதில் 10 க்கும் மேற் பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்தவித்தன. கோவை வாலாங்குளம் பற வைகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. இக்குளத்தில், லேஷர் ஒலி, இசை நிகழ்ச்சி என புத்தாண்டு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, பறவைகள் என்ற  எளிய உயிர் களை துன்புறுத்தும் செயலாகும். எனவே, வாலாங்குளத்தில் நிகழ்ச் சிகளை நடத்துக்கூடாது என இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஓசை என்ற தன்னார்வ அமைப்பு, போன்ற பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தும், ஆர்ப் பாட்டம் நடத்தியும் எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால், பல்வேறு தரப்பின் கோரிக்கையை கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வா கம் மற்றும் காவல்துறை அனும தியளித்தது. இதனையடுத்து, திட்ட மிட்டபடி வாலாங்குளத்தில் நிகழ்ச் சியை நடத்தியது. இவற்றை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். இந்நிகழ்ச்சியால், குளங்கள் முழுவதும் குப்பை கள், செருப்புகள் மற்றும் உணவுக் கழிவுகள் குவிந்து கிடந்தது. மேலும், முறையான திட்டமிடுதல் இல்லாததால் நள்ளிரவில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, பல்வேறு  தரப்பு மக்கள் கடும் பாதிக்கப்பட் டனர்.   குறிப்பாக, நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாலாங்குளத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல் லும் சாலையில் கூட்டமாக திரண்ட தால், அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீ சார் திணறினா். இரவு 2 மணி வரை  இந்த போக்குவரத்து நெரிசல் இருந்தது. இந்நிலையில் அரசு  மருத்துவமனைக்கு நோயாளிக ளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாக னங்களும், அரசு மருத்துவம னையில் இருந்து நோயாளிகளை அழைத்து வர வெளியேறிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் கடும் நெரிசலில் சிக்கி தவித்தன.