உடுமலை, ஏப்.10- உடுமலை, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டு கரும்பு அரவை ஏப்.21 ஆம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஞாயி றன்று ஆலை பாய்லர் இளஞ்சூடு ஏற்றும் விழா நடை பெற்றது. உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழநி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், கொமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடமிருந்து, ஒப் பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கரும்பு அரவை செய்யப் பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும். நடப்பாண்டு, ஆலை யில் கரும்பு அரவை பணிகள் துவங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக பாய்லர்களில் இளஞ்சூடு ஏற் றும் விழா ஆலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சண்முகநாதன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், மேலாளர் பாலன், பொறியாளர் பார்த்தி பன், ரசாயனர் ராஜ்குமார், ஆலை நிர்வாகக்குழுவினர், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகவேலு, மடத் துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி மற் றும் அலுவலர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.