கோவை, ஜன.31- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். 5 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உட னடியாக துவக்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டிஎன்எஸ்டிசி கோவை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கோவை அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் பர மசிவம் தலைமை வகித்தார். கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத் தலைவர் வேளாங் கண்ணி ராஜ், பொருளாளர் கோபால் மற்றும் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகளான சேது ராமன், பி.செல்வராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நிறை வாக எஸ்இடிசி பொதுச் செயலா ளர் கனகராஜ் நிறைவுறையாற் றினார். மாவட்டம் முழுவதும் இருந்து திரளான போக்குவரத்து ஊழியர் கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.