ஈரோடு, ஆக. 11- கடலூர் மாவட்டத்தில் நீதிமன்ற வழக்கு தொடர்பான அளவை பணியின் போது அரசு சர்வேயரை பணி செய்ய விடாமல் தடுத்து, செருப்பால் அடித்த அதிமுக குற்ற வாளியை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் கௌரி சங்கர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் த.சக்திவேல், மாவட்டச் செயலாளர் அ.விஜயராஜன், கோபி கோட்டத் தலைவர் ஆர்.முத்துராஜ் மற்றும் அரசு ஊழியர் சங்க மாநிலத் துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் சேது மாதவன் நன்றி கூறினார்.
தருமபுரி
இதோபோல், குறுவட்ட நில அளவரை தாக்கி குற்ற வாளியை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெங்கட்டேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, மாநில துணைத்தலை வர் முருகேசன், மாவட்டச் செயலாளர் சி.பிரபு, மாவட்டப் பொருளாளர் மா.முருகன், மாவட்ட இணைச்செயலாளர் க.தவமணி, மாவட்ட துணைத்தலைவர் த.இராமமூர்த்தி, அரூர் கோட்டத் தலைவர் ரா.சக்திவேல், தருமபுரி கோட்டத் தலைவர் ஆ.சங்கீதா ஆகியோர் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் வாழ்த்தி பேசினார்.