districts

img

பணத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியாது

சேலம், பிப்.7- பணத்தால் மட்டும் அதிமுக வெற்றிபெற முடியாது என சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக  கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார். சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 ரோடு சந்திப்பில் வேட்பா ளர் அறிமுகக் கூட்டம் நடைபெற் றது. இதில் சேலம் மாநகராட்சி, நக ராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வேட்பாளர்களை அமைச்சர் கே.என் நேரு வேட்பா ளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப் படும் என உறுதி அளித்து பொது மக்களின் வாக்குகளை சேகரியுங் கள். மக்களின் அனைத்து கோரிக் கைகளுக்கும் அரசு உரிய நிதியை ஒதுக்கி நிச்சயம் நிறைவேற்றி தரப் படும் என உறுதியளித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் பணத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெற முடி யாது. அதிமுகவினர் எவ்வளவு தான் பணத்தை கொடுத்தாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.  முன்னதாக, இந்நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட செயலா ளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு  மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல் வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, சிபிஐ மாவட்ட செயலா ளர் மோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.