districts

img

ரூ.72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள்

கோவை, செப். 4- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி  திட்டம் மூலம் கோவையில் ரூ.72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந் திரங்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன் விவ சாயிகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பொறி யியல் துறையின் மூலம் வேளாண்  இயந்திர மயமாக்கும் துணை இயக் கத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கிராம மக்களுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங் கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயி லாக துவக்கி வைத்தார்.  இதன்தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங் கள் 72.58  லட்சம் மதிப்பில் விவசா யிகளுக்கு 40 சதவிகிதம் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சத விகிதம் மானியத்தில் வழங்கப்பட் டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட் பட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பல்லடம் சம்பவம்: வேதனை அளிக்கிறது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47) வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப் போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில்  குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது. இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன் ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தி னாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டி யுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத் தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி., பல்லடம் சென்றார். பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நால்வரது உடல் களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் பார்வையிட்டார். பின்னர், தாக்குத லில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறு தல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது, இதில் போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க  போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்ற னர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வது வேதனை அளிக்கிறது. தவறான பாதையில் செல் லும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.