districts

img

தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ் ஆணையருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவை, மார்ச் 24- கோவை மாநகராட்சியில்  பணிபுரியும் தூய்மைப்பணியாளர் கள் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டம் அறிவித்து, போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர்  மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி களுடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. இதனை யடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கோவை மாநகராட்சியில் தினக் கூலி தொழிலாளர்களை முற்றாக வேலையை விட்டு வெளியேற்றும், நகராட்சி ஆணையாளரின் நடை முறைகள் ஆணையை திரும்ப பெறவேண்டும். மாவட்ட ஆட்சியர்  நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்த  போராட்டத்தை தூய்மைப்பணி யாளர்கள் துவக்கினர். இப்போராட்டத்தில், ஏஐடியுசி  ஜீவா முனிசிபல் சுகாதார பணி யாளர் சங்க செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார்,

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்கத்தின் தமிழ்நாடு செல்வம், கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.பால கிருஷ்ணன்,  தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் வி.ஜோதி,  கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணி யாளர் சங்கத்தின் ஹரிபுரம் ரவி  உள்ளிட்ட சங்கங்களின் தலை வர்கள் தலைமை தாங்கி போரட் டத்தினை முன்னெடுத்து வந்தனர்.  இதனையடுத்து, கோவை  மாநகராட்சி பிரதான அலுவல கத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில், தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில், ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களாக, பணி யாற்றும் தொழிலாளர்களை, புதிய தாக ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத் தாரிடம் முன்னுரிமைக் கொடுத்து பணிப் பாதுகாப்புடன் பணியில் அமர்த்தப்படும் என்றும், குற்ற வியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை  நிலுவையில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிந் துரை செய்ய இயலாது என மாநக ராட்சி ஆணையர் தெரிவித்துள் ளார்.

 நிர்வாகத் தரப்பு கடிதத்திலும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் தெரிவித்ததையடுத்து, வியாழ னன்று கோவை தொழிலாளர் இணை ஆணையர் முன்பு நடை பெற்ற பேச்சுவார்த்தையில் தொழில் அமைதி, பொதுநலன் மற்றும் தொழிலாளர் நலன் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இருதரப்பினரும் ஏற்றுக் கொண்ட  அறிவுரைகள் வழங்கப் பட்டது. இதில், குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒப்பந்த தூய்மை பணி யாளர்களை தவிர, ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணி யாற்றும் தொழிலாளர்களை, புதிய தாக ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத் தாரிடம், முன்னுரிமை கொடுத்து பணிப்பாதுகாப்புடன் பணியில் அமர்த்தப்படும் என மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள் ளப்பட்டபடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும்,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிர்வாகம் எடுக்காது என நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்று வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளை கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனை யடுத்து, தொழிலாளர்கள் உடனடி யாக பணிக்கு திரும்பினர்.

;