districts

img

முறைகேடு புகார் எதிரொலி: பெரியார் பல்கலை.,யில் சோதனை

சேலம், ஜன.11- சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் முறைகேடு புகா ரில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் வியாழனன்று பல்கலைக் கழகத்தில் சோதனை மேற்கொண் டனர். அரசின் அனுமதியின்றி தனியார்  நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடு பட்டதாக சேலம் பெரியார் பல்க லைக்கழக துணைவேந்தர் ஜெகநா தன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும், பல்க லைக்கழகத்தின் பதிவாளர் தங்க வேல், பேராசிரியர்கள் சதீஷ் ராம்,  கணேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர் களை தேடி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 7 இடங்களில் கடந்த டிச.28 ஆம் தேதி யன்று 21 மணி நேரத்துக்கு மேலாக  போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே பெரியார் பல்கலைக் கழகத்தின் அலுவலர்கள் கூட்டத்தில்  பங்கேற்பதற்காக பல்கலைக்கழ கத்துக்கு வியாழனன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந் தார். இந்நிலையில் பெரியார் பல்க லைக்கழக வளாகத்தில் 5 இடங்க ளில் சேலம் மாநகர காவல் துறையி னர் வியாழனன்று காலை மீண்டும் அதிரடியாக சோதனையில் ஈடுபட் டனர். மேலும், குற்ற வழக்கில் கைது  செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந் துள்ள துணை வேந்தரை ஆளுநர்  சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பல்கலைக்கழக வளாகத்துக்கு  வெளியே மாணவர்களும் அணி யினரும் போராட்டத்தில் ஈடுபட்டு னர். இதனால் பல்கலைக்கழகம் முழு வதும் காவல் துறையினரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள னர்.